Special Articles
சும்மாவே இருந்து 2 கோடி சம்பாதித்த இளைஞர்.. எப்படின்னு தெரியுமா?. உலகையே வாய் பிளக்க வைத்த இளைஞர்!..
தமிழ்நாட்டில் இளைஞர்களை பொருத்தவரை கல்லூரி முடித்த பிறகு சில வருடங்கள் வேலை இல்லாமல் சும்மா இருந்தாலே ஏதாவது திட்டி வீட்டில் இருந்து வேலைக்கு அனுப்பி விடுவார்கள்.
ஆனால் வேலைக்கே போகாமல் சும்மா இருந்து 2 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்த ஒரு இளைஞரை பற்றிய செய்தி தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிக பிரபலம் ஆகி வருகிறது. அப்படி என்ன செய்து இவர் இந்த இரண்டு கோடி ரூபாயை சம்பாதித்தார் என்பதை இப்போது பார்க்கலாம்.
சோஜி மொரிமோட்டோ என்ற இந்த இளைஞர் ஜப்பானை சேர்ந்தவர் ஆவார் சோஜி மொரிமோட்டோ கல்லூரியை முடித்த பிறகு வேலைக்கு செல்லலாம் என்று சென்ற பொழுது அவருக்கு வேலை பார்க்கவே பிடிக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்த இவர் அங்கு எந்த வேலையுமே செய்யாமல் இருந்திருக்கிறார். இதனை பார்த்து கடுப்பான அந்த மேலாளர் ஒரு கட்டத்திற்கு மேல் சும்மா இருப்பதற்கெல்லாம் சம்பளம் தர முடியாது என்று கூறி வேலையை விட்டு நீக்கியிருக்கிறார்.
புதிய தொழில்:
இதனால் இரவு முழுக்க வருத்தத்தில் இருந்த சோஜி மோரிமோட்டோ சும்மாவே இருந்து பணம் சம்பாதித்து காட்டுகிறேன் என்று ஒரு வைராக்கியத்தை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை சோஜி மொரிமோட்டோ போட்டார். அதாவது உங்களுக்கு எந்த ஒரு வேலைக்காவது துணை இல்லை என்று நினைத்தால் என்னை அணுகலாம் நான் உங்களுக்கு கம்பெனி கொடுப்பேன்.
அதற்கு குறிப்பிட்ட தொகையை எனக்கு தர வேண்டும் என்று கூறி ஒரு மொபைல் எண்ணையும் அவர் குறிப்பிட்டார். முக்கியமாக அங்கு வந்து உங்களுக்கு எந்த வேலையும் செய்து தரமாட்டேன் என்பதையும் அவர் குறிப்பிட்டு கூறியிருந்தார்.
இந்த நிலையில் 2018 இல் தனது சர்வீஸ் ஐ தொடங்கினார் சோஜி மொரிமோட்டோ. அதனை தொடர்ந்து அவருக்கு வருடா வருடம் பயனாளர்கள் அதிகரிக்க துவங்கினர். இவரை எதற்கெல்லாம் பணம் கொடுத்து அழைத்தனர் என்பதை கேட்டால் இன்னமுமே நகைச்சுவையாக இருக்கும்.
இப்போது மிக பிரபலம்:
ஒரு விமான விமான பயனர் ஒருவர் விமானத்தில் செல்லும் பொழுது தனக்கு டாடா கட்டுவதற்கு ஆள் இல்லை என்று கூறி சோஜி மொரிமோட்டோ வை அழைத்திருக்கிறார். அவரும் வந்து டாடா காட்டிவிட்டு அதற்கு ஒரு தொகையை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.
இன்னொரு ஒரு பெண்மணி போட்டிங் செல்வதற்கு கூட கம்பெனிக்கு ஆளில்லை என்று கூறியிருக்கிறார் சரி என்று அவருக்கும் சோஜி மொரிமோட்டோ சென்று தனது சேவையை செய்திருக்கிறார். ஆனால் அங்கு சென்று போட்டிங்கில் பெடல் போடாமல் தான் அமர்ந்திருக்கிறார் சோஜி மொரிமோட்டோ. ஏனெனில் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்பது அவருடைய விதிமுறைகளில் ஒன்று. அதே போல நிறைய பெண்கள் தவறான அழைப்புகளையும் இவருக்கு விடுத்தது உண்டு. ஆனால் அவர் வேலை செய்ய மாட்டார் என்பதால் அவற்றை தவிர்த்துள்ளார்.
இப்படியாக நாலாயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தொடர்ந்து எந்த வேலையும் செய்யாமல் இருந்து தொகையை வாங்கியதன் மூலம் தற்சமயம் கோடீஸ்வரராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் ஜப்பானில் அதிகமாக பேசப்படும் ஒரு நபராக இவர் மாறியிருக்கிறார்.
மேலும் இவரது பிசினசும் இப்பொழுது அதிகரிக்க துவங்கியிருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று பேருக்கு சேவை செய்யும் ஒரு நபராக மாறி இருக்கிறார் சோஜி மொரிமோட்டோ . இந்திய ரூபாயில் பார்க்கும் பொழுது இந்த 4000 நபர்களுக்கும் செய்த சேவையின் காரணமாக 2 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார் இவர் என்று கூறப்படுகிறது.
