Connect with us

சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா!.. பாலிவுட் போன சித்தார்த்திற்கு நடந்த சம்பவம்!

ameerkhan siddharth

Tamil Cinema News

சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா!.. பாலிவுட் போன சித்தார்த்திற்கு நடந்த சம்பவம்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். இவர் முதன்முதலாக தமிழில் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பாய்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தரவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு வந்த திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன.

அதிலும் அவர் நடித்த உதயம் என் ஹெச் 4, எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. தற்சமயம் சித்தா என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் சித்தார்த். சித்தார்த் பாலிவுட்டிற்கும் சென்று சில படங்களில் நடித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த ரங்கு தே பசந்தி என்கிற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் அமீர்க்கானுக்கு நண்பனாக நடித்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் அமீர் கான்  கழுத்தில் சித்தார்த் உதைப்பது போன்ற காட்சி இருந்ததாம். உடனே சித்தார்த்தும் அப்படியே செய்துள்ளார்.

ஆனால் அவர் அதை அமீர் கானிடம் சொல்லவே இல்லை. திடீரென சித்தார்த் உதைக்கவும் ஷாக் ஆகியுள்ளார் அமீர்கான். அதன் பிறகு மற்றொரு காட்சியில் உயரமான கட்டிடம் மேல் சித்தார்த் நிற்கும் காட்சி இருக்கும். அதில் சித்தார்த் நின்று கொண்டிருந்தப்போது அவரை தள்ளி விடுவது போல செய்து சித்தார்த்தை பயம் காட்டியுள்ளார் அமீர் கான்.

இந்த நிகழ்வை சித்தார்த் தனது பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

To Top