தற்சமயம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அரசன். இந்த படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படம் கண்டிப்பாக சிம்புவிற்கு ஒரு முக்கியமான வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிம்புவை பொறுத்தவரை அவர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதை வெகு நாட்களாகவே ஆசையாக கொண்டிருந்தார்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் என்பது அவருக்கு கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அரசன் திரைப்படம் மூலமாக அந்த ஆசை அவருக்கு நிறைவேறி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
வாய்ப்பு கேட்ட சிம்பு:
இது குறித்து வெற்றி மாறன் ஒரு பேட்டியில் கூறும்பொழுது ஆரம்பத்தில் வடசென்னை படத்தை இயக்க இருந்த பொழுது அந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிம்புவே தனுஷிடம் ஃபோன் செய்து பேசினார்.
ஏனெனில் ஆரம்பத்தில் அந்த கதையை எழுதும் பொழுது தனுஷ் மற்றும் தனுஷின் நண்பர் என்று இரண்டு கதாபாத்திரங்களை வைத்துதான் கதையை எழுதினேன்.
எனவே தனுஷின் நண்பர் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு படத்தின் கதையை மாற்றி அமைத்து விட்டோம் அதனால் அதில் சிம்பு நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.









