பேராசையால் பட வாய்ப்பை விட்ட சிம்பு.. வெந்து தணிந்தது காடு 2 நின்று போக இதுதான் காரணம்.!
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்னமும் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. இப்போதும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் சிம்பு மன்மதன் மாதிரியான திரைப்படங்களில் நடித்தபோது சிம்புவுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அப்போது அவர் நடித்த சரவணன், கோவில், தம் மாதிரியான படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
ஆனால் அதற்கு பிறகு அவர் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராத காரணத்தால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. இப்போது மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்து சக்ஸஸ் கொடுத்து வருகிறார் சிம்பு. அப்படியாக சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது.

பெரும்பாலும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தருகிறது. அப்படியாக அவர் நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு திரைப்படம். இந்த திரைப்படம் நல்ல கதையம்சத்தை கொண்டிருந்தது.
அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையில் இறங்கினார் கௌதம் மேனன். ஆனால் சிம்பு அடுத்தததாக அதிக பட்ஜெட் படத்தில் நடிக்க இருப்பதால் இதில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சிம்புவின் பேராசையால் இப்போது வெந்து தணிந்தது காடு 2 நிலுவையில் உள்ளது என இதுக்குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன.