Tamil Trailer
என்னது சிம்பு வில்லனா? அதிர்ச்சி கொடுத்த தக் லைஃப் ட்ரைலர்..!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் தக்லைஃப். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்தினமும் கமல்ஹாசனும் இணையும் ஒரு திரைப்படமாக இது இருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.
படத்தின் கதைப்படி சிறுவயதிலேயே கமல்ஹாசனின் உயிரை சிம்பு காப்பாற்றுகிறார். அதிலிருந்து சிம்புவை தனது மகன் போல நினைத்து வளர்க்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் ஒரு மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். நாயகன் திரைப்படத்தில் வருவது போலவே ஒரு கேங்ஸ்டர் என்று கூறலாம். இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த வாரிசாக சிம்பு இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சிம்புவுக்கும் கமல்ஹாசனுக்கும் யார் தலைமை பொறுப்பை பிடிப்பது என்கிற தகராறு உருவாகிறது.
இந்த நிலையில் தன்னை வளர்த்த கமல்ஹாசனையை எதிர்த்து சிம்பு சண்டையிட தொடங்குகிறார். அதனை வைத்து கதை செல்கிறது இது இல்லாமல் படத்தில் வேறு வில்லன்கள் இருப்பதாக ட்ரைலரை பார்த்தவரையில் தெரியவில்லை.
எப்படியும் சிம்புவிற்குதான் வில்லன் மாதிரியான ஒரு கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
