Gossips
சிம்புவும், கீர்த்தி சுரேஷும் அதுக்காக தயாராகிட்டு இருக்காங்க!.. கிசுகிசுவாக உலாவி வரும் செய்தி..
சின்ன வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. அவரது தந்தை டி.ராஜேந்திரன் மூலமாக இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் வளர்ந்த பிறகு இவர் கதாநாயகனாக நடிக்க துவங்கியப்போது பெரிதாக இவருக்கு வரவேற்பு இல்லை.
ஆரம்பத்தில் குடும்ப ஆடியன்ஸ்கள் முகம் சுளிக்கும் விதமான கதைகளில் இவர் நடித்ததால் இப்போதும் கூட சிலர் இவருக்கு அப்படியே முத்திரை குத்தி வைத்துள்ளனர். இதற்கு நடுவே இன்னமும் சிம்பு திருமணமே செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்.
திருமண வதந்தி:
எனவே சிம்புவிற்கு திருமணம் நடக்க போவதாக கூறி ஒரு பக்கம் வதந்திகள் பரவி வருகின்றன. அதாவது ஒரு தொழிலதிபரின் மகளுக்கும் சிம்புவிற்கும் திருமணம் நடக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் சிம்பு தரப்பினர் இதுக்குறித்து கூறும்போது அதெல்லாம் வதந்தி என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷும் அவரது நண்பர் ஒருவரை வெகு நாட்களாக காதலித்து வருகிறார். அவரைதான் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அதுக்குறித்தும் இப்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.
எனவே இருவருமே தொடர்ந்து திருமணம் தொடர்பான கிசு கிசுவில் சிக்கி வருகின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்