சிம்பு படம் தயாரிக்குறாராம்!.. எல்லாம் ரெடியாகுங்க.. கட்டம் கட்டும் தயாரிப்பாளர்கள்!. இதுதான் காரணம்!.

Tamil Actor Silambarasan : நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். அவர் நடித்த திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகள் தற்சமயம் இருந்து வருகின்றன.

மாநாடு, பத்து தல என அவர் நடித்த திரைப்படங்கள் பலவும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படங்களாகவே இருந்தன. இப்போதெல்லாம் சிம்பு முன்பு போல இல்லை. மிகவும் துடிப்புடன் சினிமாவில் நடித்து வருகிறார் என பேசப்படுகிறது.

ஆனால் இதற்கு முன்பு சினிமாவில் பல பிரச்சனைகளை செய்துள்ளார் சிம்பு. எப்போதுமே அவர் நேரத்திற்கு படப்பிடிப்புக்கு நடிக்க வரமாட்டார். சரவணா திரைப்படத்தை எடுத்தப்போது கே.எஸ் ரவிக்குமார் கூட இந்த பிரச்சனையை சந்தித்ததாக ஒரு பேட்டியில் கூறினார்.

Social Media Bar

இதனாலேயே பல இயக்குனர்களுக்கு அவரை வைத்து படம் எடுக்கவே பிடிக்காமல் போனது. இதனையடுத்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தற்சமயம் சிம்பு தனது 50 ஆவது திரைப்படத்தை தானே நடித்து இயக்கி,தயாரித்து வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து சிம்புவிற்கு படம் தயாரித்து பணத்தை இழந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இந்த நேரத்திற்காக காத்திருக்கிறார்களாம். ஒருவேளை சிம்பு தயாரித்து படம் வெளியாகும் பட்சத்தில் சிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்தால்தான் படத்தை வெளியிட விடுவோம் என பிரச்சனை செய்யலாம் என அவர்கள் யோசிக்கிறார்கள் என கூறப்படுகிறது.

தற்சமயம் அப்படியான ஒரு பிரச்சனை காரணமாகதான் கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படமும் பிரச்சனையை சந்தித்துள்ளது.