Connect with us

நாடு முழுக்க எனக்கு 25 குழந்தை இருக்கு!.. எனக்கு இருக்கு வச்சிக்கிறேன்!.. ஓப்பனாக கூறிய நடிகர் சிம்பு..

simbu

News

நாடு முழுக்க எனக்கு 25 குழந்தை இருக்கு!.. எனக்கு இருக்கு வச்சிக்கிறேன்!.. ஓப்பனாக கூறிய நடிகர் சிம்பு..

Social Media Bar

Simbu: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் பலருக்கம் ரசிகர்கள் இருப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் வளரந்து வரும் அல்லது குறைந்த படங்கள் நடித்து, அல்லது நடித்த பாதி படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை என்றாலும் ஒரு சில நடிகர்களுக்கு எப்பொழுதும் ரசிகர் கூட்டங்கள் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி தற்போது தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்ளில் இடம் பிடித்திருக்கும் நடிகர் சிம்பு.

சிம்பு என்றாலே சர்ச்சை, கிசுகிசுக்கு பஞ்சம் இருக்காது. காரணம் அவருடன் நடிக்கும் சக நடிகைகளை இவர் காதலிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வரும். அந்த வகையில் இதனை பற்றி அவரிம் கேட்டாலும், அதற்கு சிம்பு கொடுக்கும் பதில் தான் இன்னும் மாஸாக இருக்கும்.

அவ்வாறு ஒரு பேட்டியில் அவர் கொடுத்திருக்கும் கருத்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு

நம் அனைவருக்கும் டி. ராஜேந்தர் தெரியும். அவரின் டயலாக் அனைத்தும் ரைமிங்காக இருக்கும். இவரின் படங்கள் அனைத்தும் ஒரு செண்டிமெண்டாக தான் இருக்கும். அதனால் இவரின் படங்களை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அந்த வரிசையில் தனது மகனாக சிம்புவை இவர் தன்னுடைய படங்களில் நடித்து பிரபலபடுத்தினார். சிம்பு குழந்தையாக நடிக்கும் போதே அனைவரும் இவருக்கு ரசிகர் அகிவிட்டார்கள்.

simbu

இவரின் தந்தை டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் சிம்பு.

சிம்புவின் சர்ச்சையான பதில்

இவர் வெளிப்படையாக பேசுவதால் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இதன் விளைவுகளை பற்றி எல்லாம் இவர் கவலைப்பட மாட்டார். காரணம் என்ன தோன்றுகிறதோ அதை பற்றி சொல்லிவிட்டு சென்றுவிடுவார். அந்த வரிசையில் தற்போது பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் உங்களுக்கு திருநெல்வேலியில் ஒரு குழந்தை ஒன்று உள்ளதாமே அனைவரும் கூறுகிறார்கள் என அவர் கேட்க, அதற்கு சிம்பு, எனக்கு 25 குழந்தைகள் உள்ளனர் என பதிலளித்திருக்கிறார்.

மேலும் நாடு முழுவதும் என்னுடைய குழந்தைகள் உள்ளனர் எனவும் அவர் கூறியிருப்பது சர்ச்சையாகி வருகிறது.

To Top