Connect with us

கூட நடித்த நடிகையை கடுப்பேத்திய சிம்பு.. பழி வாங்க நடிகை செய்த காரியம்..

simbu charmy

Cinema History

கூட நடித்த நடிகையை கடுப்பேத்திய சிம்பு.. பழி வாங்க நடிகை செய்த காரியம்..

Social Media Bar

Actor Simbu: சிறு வயது முதலே திரைத்துறையில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. சின்ன வயது முதலே சிம்புவிற்கு நடனம் சிறப்பாக வரும் அதனாலேயே அவருக்கு சிறுவயதிலேயே நடன காட்சிகள் எல்லாம் வைத்திருந்தார் அவரது தந்தை டி ராஜேந்திரன்.

சிம்பு  தமிழில் நடித்த முதல் திரைப்படம் உறவை காத்த கிளி. அந்த திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சிம்பு. அதற்கு பிறகு அவர் வளர்ந்த இளைஞனாக முதல் படம் என்று நடித்தார் என்றால் அது காதல் அழிவதில்லை என்கிற திரைப்படம்.

இந்த திரைப்படத்தை அவரது தந்தை டி ராஜேந்திரன்தான் இயக்கினார் சிம்புவின் தாயார் இந்த படத்தை தயாரித்தார். மொத்தமாக குடும்பமாக சேர்ந்து சிம்புவை கதாநாயகன் ஆக்குவதற்காக அந்த திரைப்படத்தை எடுத்தனர்.

simbu-1
simbu-1

ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த கோவில், தம், குத்து போன்ற திரைப்படங்கள்தான் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த முதல் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தில் நடிக்கும் பொழுதே இந்த படத்தின் நடிகையான சார்மிக்கும் சிம்பு விற்கும் இடையே பிரச்சனைகள் இருந்திருக்கின்றன.

முதல் படத்தில் சிம்புவின் அனுபவம்:

நடிகை சார்மிக்கும் காதல் அழிவதில்லை திரைப்படம்தான் முதல் திரைப்படம். சார்மியை பொறுத்தவரை அவருக்கு பெரிதாக நடனம் ஆடத் தெரியாது. ஆனால் சிம்பு சிறப்பாக நடனம் ஆட கூடியவர். படப்பிடிப்பில் நிறைய முறை சார்மி தவறாக நடனம் நடனமாடியுள்ளார். இதனால் திரும்பத் திரும்ப ஒரே காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் கோபமான சிம்பு சார்மியை திட்ட துவங்கி விட்டார். அப்பொழுது சார்மி ஒரு விஷயம் கூறியிருக்கிறார். உங்களுக்கு இணையான ஒரு நடிகராக நானும் சினிமாவில் வருவேன் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அப்போதே வெளிப்படையாக சிரித்து இருக்கிறார் சிம்பு.

பிறகு சிம்பு பின் நாட்களில் ஒரு பேட்டியில் கூறும் பொழுது சார்மி அப்படி கூறும் பொழுது நானே விளையாட்டாக சிரித்துவிட்டு அதை கடந்து விடுவேன். அவர் பெரிய நடிகையாக வருவார் என்று நான் நினைத்தது கிடையாது. ஆனால் பிறகு தெலுங்கு சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக மாறினார் சார்மி. எனவே முதல் படமே எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது என்று கூறுகிறார் நடிகர் சிம்பு.

To Top