Tamil Cinema News
மேடையிலேயே சிம்புவை லாக் செய்த த்ரிஷா.. அதிர்ச்சியான எஸ்.டி.ஆர்.!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்சமயம் மணிரத்தினம் இயக்கி வரும் திரைப்படம் தக் லைஃப்.
இந்த திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கமல்ஹாசன் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய த்ரிஷா பேசிய சில விஷயங்கள் அதிக வைரலாகி வருகின்றன.
அதில் த்ரிஷா பேசும்போது என்னை இப்போதும் பலரும் பார்க்கும்போது சிம்புவுடன் விண்ணை தாண்டி வருவாயா பாகம் 2 எப்போது செய்வீர்கள் என்றுதான் கேட்கிறார்கள் என கூறினார். அதனை கேட்டதும் சிம்பு அதிக அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
ஏனெனில் சிம்புவே இப்போது வரை விண்ணைதாண்டி வருவாயா 2 திரைப்படம் நடிக்கலாம் என முடிவெடுக்காமல்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் த்ரிஷா இப்படி கூறியதை அடுத்து அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.
