News
எனக்கே ரெட் கார்டா!.. சர்ச்சை குறித்து ஓப்பன் டாக் கொடுத்த சிம்பு!..
சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகராக சிம்பு இருந்து வருகிறார். பெரும்பாலும் சிம்புவின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சிம்பு சில நாட்கள் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வராமல் இருந்தது பெரும் சர்ச்சையானது.
இதனால் நடிகர் சிம்புவிற்கு வாய்ப்புகளும் குறைய துவங்கின. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் கொரோனா குமார் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் தொகையும் வாங்கியிருந்தார் சிம்பு.

சிம்புவிற்கு வந்த பிரச்சனை:
ஆனால் அந்த படத்தில் வந்து அவர் நடித்துக்கொடுக்கவே இல்லை. அவர் கால்ஷீட் தருவார் தருவார் என காத்திருந்த தயாரிப்பாளர் பொறுமையிழந்து இதுக்குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் கூறினார்.
இதனையடுத்து சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு விட்டதாக பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட சிம்பு பேசும்போது எனக்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டதாக நிறைய வதந்திகள் சென்று கொண்டுள்ளன.

அது எதுவும் உண்மையில்லை. நாங்கள் சுமூகமாக பேசி அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டோம். என பதிலளித்துள்ளார் சிம்பு.
