நான் கழுத்தை நெறித்ததில் அவர் நிலைமை மோசமாயிட்டு..! கமல் குறித்து சிம்பு கூறிய பகீர் தகவல்..!
36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்தான் தக் லைஃப். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
அதில் பார்க்கும்போது கமல்ஹாசன் மற்றும் சிம்பு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. தலைமை பொறுப்புக்காக நடக்கும் சண்டையாக படத்தில் சண்டை காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த நிலையில் திரைப்பட படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான அனுபவம் குறித்து நடிகர் சிம்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது ஒரு காட்சியில் கமல் சாரின் கழுத்தை பிடித்து நெறிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது நான் கமல்சாரின் கழுத்தை மெதுவாகதான் நெரித்தேன். ஆனால் அவர் கொடுத்த ரியாக்ஷன் ஏதோ நிஜமாக அவர் கழுத்தை நெறிப்பது போல இருந்தது. அது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது கமல் சார் கழுத்தை விட்டால் மணிரத்தினம் சார் ரீ டேக் போக சொல்வார்கள். எனவே அந்த காட்சியை எடுத்து முடிக்கும் வரையில் கமல் சார் கழுத்தில் இருந்து கையை எடுக்கவில்லை.
அதற்காக கமல்சாரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார் சிம்பு.