News
பழைய நடிகர்கள் எல்லாம் என்னை மன்னிக்கணும்..! – மேடையில் மன்னிப்பு கேட்ட மிர்ச்சி சிவா!
தமிழ் சினிமாவில் அகில உலக சூப்பர் ஸ்டார் என பலராலும் அழைக்கப்படுபவர் நடிகர் மிர்ச்சி சிவா. மேடை நிகழ்ச்சிகளில் துவங்கி பல இடங்களில் நகைச்சுவை செய்து வருவது இவரது வழக்கம்.
1972 ஆம் ஆண்டு தேங்காய் சீனிவாசன், முத்துராம் இன்னும் பல நடிகர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் காசேதான் கடவுளடா என்கிற திரைப்படம். இப்போது வரை தமிழ் சினிமாவில் வெகுவாக பேசப்படும் திரைப்படங்களில் இந்த படமும் முக்கியமான திரைப்படம்.
தற்சமயம் இதே கதையை படமாக்குகின்றனர். இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். நடிப்பை பொறுத்தவரை ஒரு ஆவரெஜான நடிப்பை கொடுப்பவர்தான் மிர்ச்சி சிவா என்பது பரவலாக அறிந்த விஷயமே.
சமீபத்தில் காசேதான் கடவுளடா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் மீட்டிங் நடந்தது. இதில் பேசிய நடிகர் சிவா பழைய காசேதான் கடவுளடா திரைப்படத்தை மறுபடியும் எடுக்கவே முடியாது. அவர்களது நடிப்பை நம்மால் கொடுக்கவே முடியாது. எனவே அந்த படத்தில் நான் நடித்ததற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். என வானத்தை பார்த்து மன்னிப்பு கேட்டுள்ளார் சிவா.
