பொங்கலுக்கு போட்டி போட்டு வெளியான எம்.ஜி.ஆர் சிவாஜி படம்!.. அப்போ ஹிட்டு கொடுத்தது யார் தெரியுமா?

Sivaji MGR : பொங்கலுக்கு பெறும் நடிகர்களின் திரைப்படங்கள் போட்டி போட்டுக் கொள்வது என்பது இன்று நேற்று நடப்பதில்லை. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கம் முதலே இந்த போட்டி நடந்து வருகிறது.

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் போட்டி இருந்த காலகட்டத்தில்தான் பொங்கலின் பொழுது திரைப்படங்கள் போட்டி போட்டுக் கொள்வது என்பது ஆரம்பமானது. ஏனெனில் விசேஷ நாட்களில் அப்போதெல்லாம் அதிகமாக திரையரங்கிற்கு செல்வதை மக்கள் பழக்கமாகக் கொண்டிருந்தனர்.

எனவே அப்போது போட்டி போட்டு படத்தை வெளியிட்டால்தான் நல்ல வசூலை பார்க்க முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் போட்டி போட்டுக் கொண்டு அவரவர் திரைப்படத்தை வெளியிட்டார்.

Karnan
Karnan
Social Media Bar

எம்ஜிஆர் நடிப்பில் வேட்டைக்காரன் திரைப்படமும் சிவாஜி கணேசன் நடிப்பில் கர்ணன் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. அந்த நாளில் எந்த திரைப்படம் அதிக வசூலை கொடுக்கும் என்பது அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் போட்டியாக இருந்தது.

வேட்டைக்காரன் வழக்கமான ஒரு கமர்சியல் திரைப்படமாக இருந்தது கர்ணன் புராண திரைப்படமாகவும் சிவாஜியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திரைப்படமாகவும் இருந்தது. படத்தின் பட்ஜெட் வழியாகவும் எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை விட கர்ணன் திரைப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தது.

இருந்தாலும் கூட சிவாஜியின் கர்ணன் திரைப்படத்தை விட வேட்டைக்காரன் திரைப்படம்தான் அதிக வசூலை கொடுத்தது இது குறித்து திரை ஆர்வலர்கள் கூறும் பொழுது அப்போதும் சரி இப்போதும் சரி, மக்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை பார்ப்பது கிடையாது சண்டைக் காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் தான் அவர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

எனவே தான் தமிழ் சினிமாவில் சண்டை படங்களுக்கான வசூல் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது என்று கூறுகின்றனர்