News
எங்க அப்பாவை விட நீங்க பெரிய நடிகர் எல்லாம் கிடையாது!.. சிவாஜி கணேசனிடம் சண்டை போட்ட சுருதிஹாசன்!..
தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் சிறப்பான நடிகராக அறியப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். எப்போதுமே சிவாஜியை விட தன்னை பெரிய நடிகராக எந்த ஒரு நடிகரும் சொல்லிக்கொள்ள முடியாது. ஏனெனில் அப்போதைய சமயத்தில் இந்தியாவிலேயே சிறந்த நடிகராக சிவாஜி அறியப்பட்டார்.
அவருடைய நடிப்பை கண்டு அமெரிக்காவில் எல்லாம் இவருக்கு மரியாதை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. சிவாஜி கணேசனுக்கு அடுத்து ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். பெரும்பாலும் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
சிவாஜி கணேசன்:
புது வகையான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். பெரும்பாலும் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும்.

இந்த நிலையில் சுருதிஹாசனுக்கும் சிவாஜிக்கும் நடந்த விவாதம் குறித்து கமல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கமல்ஹாசன் அதில் கூறும்போது சுருதிஹாசன் சின்ன பிள்ளையாக இருக்கும்போது சிவாஜி கணேசனோடு விளையாடு வருவார்.
சுருதிஹாசன் சொன்ன பதில்:
சிவாஜி கணேசனுக்கும் சுருதியை பிடிக்கும். அப்போது ஒரு நாள் சிவாஜி கணேசன் சுருதியிடம் சென்று உங்க அப்பா பெரிய நடிகரா இல்லை நான் பெரிய நடிகரா எனக் கேட்டுள்ளார். அதை கேட்டுவிட்டு அமைதியாக நின்றுள்ளார் சுருதி.

நாந்தான் பெரிய நடிகன் வேணும்னா உங்க அப்பன் கிட்டயே கேட்டுபாரு சொல்லுவான் என கூறியுள்ளார் சிவாஜி. அதற்கு பதிலளித்த சுருதிஹாசன் எங்கப்பா இந்த மரத்துல ஏறுவார் உங்களால ஏற முடியுமா? என கேட்டுள்ளார்.
அதை கேட்டதும் சிவாஜிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஒத்துக்கிறேன் மா உங்கப்பன் தான் பெரிய நடிகர் என கூறியுள்ளார். இந்த தகவலை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.
