Cinema History
இவன் சரிப்பட்டு வரமாட்டான்!.. பாதி படத்தோட சிவாஜியை தூக்கிய ஏ.வி.எம்!.. வெளி மாநிலம் பயிற்சி பெற்ற நடிகர் திலகம்!.
கருப்பு வெள்ளை காலக்கட்டங்களிலும் சரி. இப்போதும் சரி சினிமாவில் வாய்ப்பை பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் கிடையாது. அதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். முக்கியமாக சினிமாவிற்குள் செல்லும் அனைவருக்குமே அதில் நல்ல வாய்ப்பும் வரவேற்புகளும் கிடைத்துவிடும் என கூறிவிட முடியாது.
சினிமாவில் வாய்ப்பே கிடைக்காமல் காணாமல் போனவர்கள் பலர் உண்டு. கிட்டத்தட்ட சிவாஜி கணேசனுக்கும் அதுதான் நடந்திருக்கும். ஆனால் அவர் தனது விடா முயற்சி மூலமே தனது முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்தின் வாய்ப்பை பெற்றார்.
இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சுவின் இயக்கத்தில் பராசக்தி திரைப்படம் தயாரானப்போது அதில் சிவாஜி கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் கிருஷ்ணன் பஞ்சு. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு சிவாஜி கணேசனை பிடிக்கவில்லை.

அதற்கு சிவாஜி கணேசனின் தோற்றமே காரணமாக இருந்தது. ஏனெனில் அப்போது சிவாஜி கணேசன் அதிக வறுமையில் இருந்தார். எனவே மிகவும் ஒல்லியாக காணப்பட்டார் சிவாஜி. ஆனாலும் கிருஷ்ணன் பஞ்சு உறுதியாக இருந்ததால் பராசக்தியின் படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டன.
இருந்தாலும் சிவாஜி கணேசனை வைத்து படமெடுத்தால் அது கண்டிப்பாக வெற்றியடையாது என நினைத்தார் ஏ.வி.எம். எனவே மீண்டும் கதாநாயகனை மாற்றுவது குறித்து அவர் பேச துவங்கினார். ஆனால் இயக்குனர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் சிவாஜி கணேசனுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார் ஏ.வி.எம்.
அதாவது 3 மாதங்கள் வரை சிவாஜி கணேசனுக்கு கொடுக்கப்படும். அதற்குள் ஒரு ஹீரோ போல அவரது உடலை மாற்ற வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து படத்தில் நடிக்க முடியும். 3 மாதம் என்பது மிக குறைவு என்றாலும் வெளி மாநிலத்திற்கு சென்று உடல் எடையை அதிகரித்து வந்தார் சிவாஜி கணேசன்.
அதன் பிறகுதான் அந்த படத்தை முழுமையாக படமாக்கினார்கள்.
