Cinema History
சாமி படத்தில் எல்லாம் என்னால நடிக்க முடியாது… நல்ல வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. சிவாஜிக்கு செம ஹிட்!..
Actor Sivaji Ganesan : கொள்கை ரீதியாக சிலர் எடுக்கும் முடிவுகள் அவர்கள் எதிர்காலத்திலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறலாம். தமிழில் பிரபலமான நடிகராக சிவாஜி கணேசன் இருந்ததற்கு முக்கிய காரணமே அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவர்.
நடிகர் எம்.ஜி.ஆரோ அல்லது மற்ற நடிகர்களோ தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளைதான் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு இப்பொழுது இருக்கும் விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் கூட ஒரு படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க வேண்டும் என்றால் நடிப்பதற்கு யோசிப்பார்கள்.
ஆனால் எப்படி நடிக்க வேண்டும் என்று கூறினாலும் கூட உடனே அதை ஒப்புக்கொண்டு நடிக்கக் கூடியவர்தான் நடிகர் சிவாஜி கணேசன். தொடர்ந்து அவரது நடிப்புக்கு சவால் விடும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து புதிது புதிதாக அதில் நடிப்பை காட்டி வந்ததால்தான் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்னும் பட்டமே கிடைத்தது.
இந்த நிலையில் சம்பூர்ண ராமாயணம் என்கிற ஒரு திரைப்படத்தை தமிழில் எடுத்தனர். அந்த திரைப்படத்தில் பரதன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எஸ் எஸ் ராஜேந்திரனுக்கு கிடைத்தது ஆனால் அவர் அப்பொழுது திமுக கட்சியில் இருந்ததால் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டிருந்தார்.
அப்படியான கொள்கையில் இருக்கும் பொழுது ராமர் தொடர்பான ஒரு திரைப்படத்தில் எப்படி நடிக்க முடியும் என்று அதில் நடிக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு சிவாஜி கணேசனுக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக நடித்தார் சிவாஜி கணெசன்.
சிவாஜி கணேசனுக்கு அதனால் அதிக வரவேற்பு கிடைத்தது ஒரு வேளை எஸ் எஸ் ஆர் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவருக்கும் அந்த வரவேற்பு கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்