Cinema History
நான் யாருன்னே தெரியாமல் எதுக்கு அதை செய்யுறீங்க… சிவாஜி படத்தின்போது அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்!. இதுதான் விஷயமா?
Sivaji Ganesan: தமிழில் சிவாஜி கணேசனை வைத்து படம் எடுப்பதற்கு என்றே சில இயக்குனர்கள் உண்டு. இவர்கள் எல்லாம் அதிகப்பட்சம் எப்போதும் சிவாஜி கணேசனை வைத்துதான் திரைப்படம் இயக்குவார்கள். அப்படி சிவாஜி கணேசனை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ் கோபாலகிருஷ்ணன்.
அதே போல இவர் நடிகர் ஜெமினி கணேசனுக்கும் கூட நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதில் கற்பகம், குறத்தி மகன் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. ஆனால் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆரை வைத்து மட்டும் பெரிதாக திரைப்படங்களே இயக்கவில்லை. பொதுவாக எம்.ஜி.ஆர் திரைக்கதையில் மாற்றம் செய்யக்கூடியவர் என்பதால் அவர் நிராகரித்திருக்கலாம்.
சிவாஜி கணேசன் நடிப்பில் கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன் இயக்கி, தயாரித்து வெளியான திரைப்படம் பேசும் தெய்வம். இந்த திரைப்படத்தில் பல பிரபலங்களுக்கு கே.எஸ் கோபாலகிருஷ்ணன் வாய்ப்பளித்திருந்தார். இதனால் படப்பிடிப்பிற்கு அதிக செல்வானது. இந்த செலவுகள் அதிகமாகவே அவர் யாரிடமாவது கடன் வாங்கலாம் என முடிவு செய்தார்.
அப்போது இந்த விஷயத்தை அறிந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ் வாசன் அவருக்கு உதவுவதற்கு முன் வந்தார். ஆனால் அதற்கு முன்பு வரை கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன் எஸ்.எஸ் வாசனை நேரில் சந்தித்ததே கிடையாது. யார் என்றே தெரியாத நபர் ஒருவர் இப்படி கடன் கொடுக்க முன் வருகிறாரே என அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்த நிலையில் எஸ்.எஸ் வாசனை நேரில் சென்று சந்தித்தார் கே.எஸ் கோபாலகிருஷ்ணன். அவரை பார்த்ததும் அமர வைத்த எஸ்.எஸ் வாசன் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என கேட்க 2 லட்சம் வேண்டும் என கூறியுள்ளார் கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன்.
அதை தயங்காமல் எடுத்து கொடுத்த எஸ்.எஸ் வாசன் எனக்கு உங்கள் திரைப்படங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்று மட்டும் கூறியுள்ளார். அதே போல பிறகு வெளியான பேசும் தெய்வம் திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்