Cinema History
நீ நல்ல நடிகண்டா! – சிவாஜியையே பிரமிக்க வைத்த கே.எஸ் ரவிக்குமாரின் நடிப்பு!
தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் பாரதி ராஜா போல நடிகர்களின் இமையம் என நடிகர் சிவாஜியை கூறலாம். தமிழில் பல கதாநாயகர்கள் சண்டை போட்டு தீமைக்கு எதிராக போராடும் டெம்பிளேட் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிப்பதை பார்க்கலாம்.
ஆனால் சிவாஜி கணேசன் எப்போதும் வித்தியாசமான சாதரண மனிதனாக நடித்திருப்பார். சண்டை கூட போட தெரியாத கதாபாத்திரமாக எல்லாம் நடித்திருப்பார். படையப்பா படத்தில் சிவாஜி ரஜினிகாந்திற்கு அப்பாவாக நடித்திருந்தார்.
இந்த படத்தை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார். அதில் ஒரு காட்சியில் சொத்தை பிரிக்கும்படி மணிவண்ணன் கேட்க மொத்த சொத்தையும் எழுதி வைப்பார் சிவாஜி.
அந்த காட்சியில் முதலில் ரஜினிகாந்த் வந்து கையெழுத்து போடுவார். அதன் பிறகு லெட்சுமி கையெழுத்து போடுவார். அதன் பிறகு ரஜினியின் தங்கை கதாபாத்திரமான சித்தாரா கையெழுத்து போடுவார். இந்த காட்சியில் சித்தாரா கையெழுத்து போடும்போது மட்டும் அவரது முடியை கோதி கொடுத்துவிட்டு அழ வேண்டும் என சிவாஜியிடம் கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.
ஏன் சித்தாராவுக்கு மட்டும் நான் அழனும் என கேட்டுள்ளார் சிவாஜி. சித்தாரா பொண்ணு சார் அதுனாலதான் என்றார் ரவிக்குமார். உடனே அந்த காட்சியை நடித்து காட்டு என சிவாஜி கூற கே.எஸ் ரவிக்குமார் சித்தாரா வந்ததும் அழுதுள்ளார்.
எதை நினைச்சி இப்படி அழுத? என சிவாஜி கேட்டவுடன் ஆம்பள புள்ள எப்படி வேணாலும் பொழைச்சிக்குவான். பொண்டாட்டி வாழ்ந்து முடிச்சிட்டா. ஆனா பொண்ணு இனிமேதான சார் வாழப்போறா, அதான் அந்த இடத்தில் என் பொண்ணை வச்சி பார்த்தேன். அழுகை வந்துட்டு என கே.எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
இதை கேட்டு நீ இயக்குனர் மட்டும் இல்ல நல்ல நடிகணும் கூட என பாராட்டியுள்ளார் சிவாஜி.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்