ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி.. சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு..!

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 30 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது தன்னுடைய சம்பளத்தை 50 கோடிக்கு உயர்த்தி இருக்கிறார்.

அந்த அளவிற்கான ஒரு வெற்றியை அமரன் திரைப்படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அமரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் தமிழில் முக்கிய நடிகர்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவராக மாறியிருக்கிறார்.

அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஸ் ஆன திரைப்படமாக இருந்தாலும் கூட அது சிவகார்த்திகேயனுக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதற்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி படங்களாக தான் நடித்து வந்தார்.

இந்த நிலையில் இப்பொழுது அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே மிகவும் சீரியசான கதைகளத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

Social Media Bar

அதனை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் குறித்து இன்னும் சர்ச்சைகள் சென்று கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்துடன் போட்டியிடும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறும் பொழுது சிவகார்த்திகேயன் கண்டிப்பாக ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி திரைப்படத்தை வெளியிட மாட்டார். ஏனெனில் ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் அதற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனோடு போட்டி போடும் அளவிற்கு சிவகார்த்திகேயன் துணிய மாட்டார் என்று கூறியிருக்கிறார்.