Connect with us

அயலான் திரைப்படம், முக்கால்வாசி வேலை முடிஞ்சிட்டாம் – படம் எப்போ ரிலீஸ்?

News

அயலான் திரைப்படம், முக்கால்வாசி வேலை முடிஞ்சிட்டாம் – படம் எப்போ ரிலீஸ்?

Social Media Bar

இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனரான ரவிக்குமாரின் இரண்டாவது திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். 

இந்த படம் குறித்த செய்திகள் வெகு நாட்களாகவே தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளன. பட்ஜெட் பிரச்சனை காரணமாக படத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் படத்தில் முக்கால்வாசி வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்னும் டப்பிங் மற்றும் சிஜி வேலைகள் பாக்கி இருக்கின்றன, அவற்றிற்கு சிறிது நாள் தேவைப்படும் என்பதால் அடுத்த வருடம் ஜூலை மாதம் அயலான் படத்தை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

இந்த படம் ஏலியன் தொடர்பான படம் என்பதால் குழந்தைகளுக்கான படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன், ரவிக்குமார் இருவருக்குமே மிக முக்கியமான படமாக அயலான் இருக்கும் என கூறப்படுகிறது.

To Top