கடனுக்கு கொடுத்த தொகையே திரும்ப வரலை… அப்படி எவ்வளவு கொடுத்தார்.. கவலையில் சிவகார்த்திகேயன்!..

Sivakarthikeyan Ayalaan : சிவகார்த்திகேயன் பெரும் நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படம் ஆக்கி வெளியிட்ட திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தின் மீது பெரும் நம்பிக்கை  கொண்டிருந்ததற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஆர் ரவிக்குமார்.

அவர் மிகக் குறைந்த பட்ஜெட்டில் இன்று நேற்று நாளை என்கிற திரைப்படத்தை எடுத்து அதை பெரும் ஹிட் கொடுத்தார். அந்த நம்பிக்கையில்தான் அயலான் திரைப்படத்திற்கான வாய்ப்பை சிவகார்த்திகேயன் ஆர் ரவிக்குமாருக்கு கொடுத்தார்.

ஆனால் அயலான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்தது. முதலில் படத்தை தயாரிப்பதிலேயே நிறைய சிக்கல்கள் இருந்தது. அதற்காக பணம் அதிகமாக செலவானது. எனவே படத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முடித்தனர்.

ayalaan
ayalaan
Social Media Bar

அதேபோல படத்தை வெளியிட இருந்த பொழுது சிவகார்த்திகேயன் ஏற்கனவே பலரிடம் வாங்கி இருந்த கடனை அடைத்தால் தான் அந்த திரைப்படத்தை வெளியிட முடியும் என்கிற பிரச்சனை வந்தது. இந்த நிலையில் 30 கோடி ரூபாய் சிவகார்த்திகேயன் கடனாக கொடுக்க வேண்டியிருந்தது.

தான் வைத்திருந்த சம்பள பணத்திலிருந்து அந்த 30 கோடியையும் கொடுத்து அடைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஏனெனில் கண்டிப்பாக பொங்கலுக்கு அயலான் வெளியாக வேண்டும் என்பதே சிவகார்த்திகேயனின் எண்ணமாக இருந்தது.

ஆனால் தற்சமயம் வெளியாகி இருக்கும் அயலான் திரைப்படம் இதுவரை 10 கோடிக்கு தான் ஓடி இருக்கிறது என்று கூறப்படுகிறது படத்தை எடுப்பதற்கு கிட்டத்தட்ட 60 முதல் 100 கோடி வரை செலவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் கடனாக கொடுத்த முப்பது கோடி கூட படத்தின் மூலமாக வரவில்லை என்பது அவருக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.