News
மாவீரன் படப்பிடிப்பு துவக்கம் – சங்கர் மகளுடன் நிற்கும் சிவகார்த்திகேயன்
விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு அடுத்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன்.

தற்சமயம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களின் தயாரிப்பு செலவும் சிவகார்த்திகேயன் சம்பளமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அவர் நடித்து மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ள நிலையில் தற்சமயம் மாவீரன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
கிட்டத்தட்ட பழைய ரஜினிகாந்தின் தோற்றத்தை இந்த படத்தில் கொண்டு வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பானது நேற்று துவங்கியது. நடிகை அதிதி சங்கர் ஆசைக்காக விருமன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என பேசப்பட்டது. ஆனால் தற்சமயம் அவர் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடிப்பதை வைத்து பார்க்கும்போது அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாவீரன் திரைப்படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.
