Connect with us

விஜய்யோடும் கூட்டணி போட்ட சிவகார்த்திகேயன்!.. என்னவா இருக்கும்!.

sivakarthikeyan vijay

News

விஜய்யோடும் கூட்டணி போட்ட சிவகார்த்திகேயன்!.. என்னவா இருக்கும்!.

Social Media Bar

சிவகார்த்திகேயன் மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதற்கு பல வித யுக்திகளை பின்பற்ற கூடியவர். அந்த வகையில் பல நடிகர்களின் படங்களில் கேமியோ ரோல்களில் வருவதற்கு திட்டமிட்டுள்ளார் போல.

இதற்கு முன்பே பெரும்பாலும் திரைப்பட ப்ரோமோஷன்களுக்கு அனைவரும் யூ ட்யூப் செலிபிரிட்டிகளை நாடி செல்லும்போது சிவகார்த்திகேயன் மட்டும் சின்ன திரையை நாடி செல்வார். ஏனெனில் யூ ட்யூப்பை விடவும் சின்னத்திரை அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது.

முக்கியமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் குடும்ப ஆடியன்ஸ்களை ஈர்க்கும் படங்களாக இருப்பதால் அவர்களிடம் விளம்பரப்படுத்த சின்னத்திரை அவருக்கு நல்ல கருவியாக இருந்து வருகிறது.

sivakarthikeyan
sivakarthikeyan

இதற்கு நடுவே சிவகார்த்திகேயன் தொடர்ந்து நிறைய படங்களில் கேமியோ ரோல்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் ஏற்கனவே கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வலம் வந்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்திலும் கூட சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அப்படியிருக்கும் பட்சத்தில் அது சிவகார்த்திகேயனுக்கும் கோட் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top