News
இமானிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.கே.. வைரலாகும் வீடியோ..!
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகர்தான் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்தபோதும் சரி தமிழ் சினிமாவிலும் சரி அவருக்கு என்று தனியான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதில் சிவகார்த்திகேயன் மிகவும் கெட்டிக்காரத்தனமாக இருந்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
ஆரம்பத்தில் காமெடி கதாநாயகனாகதான் இவர் அறிமுகமானார் மனங்கொத்தி பறவை, எதிர்நீச்சல் போன்ற நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து காமெடி நடிகராக இருந்தவர் ஆனால் காமெடி நடிகராகவே நடித்துக் கொண்டிருப்பது மட்டும் மக்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்காது என்பதை அறிந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க தொடங்கினார்.

காக்கி சட்டை திரைப்படத்தில் கொஞ்சம் சீரியசாக அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் கனா திரைப்படத்தில்தான் முழுக்க முழுக்க சீரியஸான ஒரு கதாபாத்திரமாக நடித்தார். அதற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்சமயம் அமரன் திரைப்படத்திலும் சீரியஸாகவே நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் வளர்ச்சி:
விஜய் அஜித் மாதிரியான ஒரு இடத்தை இவர் சினிமாவில் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக இமான் அளித்த ஒரு பேட்டியின் காரணமாக சிவகார்த்திகேயன் அதிக சர்ச்சைக்கு உள்ளானார்.
எனது குடும்பம் பிரிந்ததற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் எனது மகளின் நலன் கருதி நான் அந்த விஷயங்களை வெளியில் கூறாமல் இருக்கிறேன் என்று இமான் கூறியிருந்தார். இமானின் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இருந்ததாகவும் அதனால்தான் இமான் பிரிந்து சென்றதாகவும் ஒரு பேச்சுகள் தானாகவே வலம் வர துவங்கின.

இந்த நிலையில் முன்பு ஒரு தடவை சிவகார்த்திகேயன் இமானிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று சமீபகாலமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் பேசும் சிவகார்த்திகேயன் நான் இந்த உலகத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அது இமான் அண்ணாவிடம்தான் கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேட்ட எஸ்.கே:
ஏனெனில் நானும் இமான் அண்ணாவும் எப்பொழுதும் வெளியே குடும்பத்துடன் சேர்ந்து உணவகங்களுக்கு செல்வோம். ஆனால் இப்பொழுது வேலை பளு காரணமாக என்னால் அப்படி செல்ல முடியவில்லை.
அதனால் இமான் அண்ணா என் மீது வருத்தமாக இருக்கிறார் நான் எப்பொழுதும் அவரை அண்ணன் என்று தான் அழைப்பேன் அவரும் என்னை தம்பி என்று தான் அழைப்பார். அந்த அளவிற்கு நல்ல உறவு எங்களுக்குள் உண்டு என்று சிவகார்த்திகேயன் கூறி இருந்திருக்கிறார். அந்த வீடியோவை இப்பொழுது ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
