இந்த மாதிரி கதையெல்லாம் வாங்க மாட்டோம் ப்ரோ!.. எஸ்.கே படத்திற்கு நோ சொன்ன வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்!.. இதுதான் காரணமாம்!..

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவருக்கு ஒரு படம் வெற்றியை கொடுத்தால் அடுத்தப்படம் தோல்வியை கொடுத்துவிடுகிறது. உதாரணத்திற்கு டான் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

அதற்கு பிறகு வந்த மாவீரன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. கதை ரீதியாகவும் அது நல்ல வரவேற்பை பெற்ற கதையாக அது இருந்தது. அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அயலான். அயலான் திரைப்படத்தை பொறுத்தவரை சிறப்பான வசூல் என்று சொல்லிவிட முடியாது.

sivakarthikeyan
sivakarthikeyan
Social Media Bar

ஏனெனில் அயலான் படத்திற்கான பொருட் செலவே எக்கச்சக்கமாக செய்திருந்த நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. அதற்கு பிறகு தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் லாஜிக் படி நல்ல வெற்றியை தர வேண்டும்.

பிரச்சனையை சந்திக்கும் அமரன்:

ஆனால் ஆரம்பத்திலேயே இந்த திரைப்படத்திற்கு பிரச்சனை வர துவங்கியுள்ளது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்கிறார். இந்த திரைப்படம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விநியோகஸ்தர்கள் இந்த படத்தின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனராம். ஏற்கனவே பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்குவது போல எக்கச்சக்கமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்துவிட்டன. இது ஒரு சலிப்பூட்டும் கதையாக இருக்கும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது.

அதே போல இஸ்லாமிய நாடுகளை பொறுத்தவரை தங்களது மதத்தை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை வெளியிடுவதற்கு தடை விதித்து விடுகின்றதாம். இதனால் வெளிநாட்டிலும் இந்த படத்தை வாங்குவது குறித்து யோசனையில் உள்ளனர். இதனால் அமரன் திரைப்படத்தை விநியோகம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.