Latest News
அங்க சுத்தி.. இங்க சுத்தி..! சூர்யா சோற்றில் கையை வச்ச எஸ்.கே..
சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்தில் முன்னாள் நகைச்சுவை நடிகர் சூரி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பாகம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ஹீரோவாக அறியப்பட்டார்.
அதன் பிறகு வெளிவந்த கருடன் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்ற சூரி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொட்டுக்காளி திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கப் போகும் படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகி அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.
தற்போது வளர்ந்து வரும் பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிவகார்த்திகேயன், பாடலாசிரியர், பாடகர், நடிகர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இவரின் தயாரிப்பில் வெளிவந்த கொட்டுக்காளி திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், பலரும் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி ஆக எடுக்கப்பட்ட கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பலராலும் பாராட்டு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் அமீர் கொட்டுக்காளி திரைப்படத்தை நான் தயாரித்து இருந்தால் நிச்சயம் திரையரங்குகளில் வெளியிட மாட்டேன். ஏனென்றால் சர்வதேச விருதுக்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் நிச்சயம் பொதுவான ஆடியன்ஸை கவராது என எனக்கு தெரியும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது இது ஒருபுறம் நடக்க, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படத்தை பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சூர்யாவுக்கு பதிலாக எஸ். கே
கொட்டுக்காளி திரைப்படத்தை தயாரித்த வினோத்திடம் தனக்கு ஒரு கதை எழுதுமாறு கூறியிருக்கும் சிவகார்த்திகேயன், அதற்காக இயக்குனர் வினோத்தும் தயாராகி வரும் நிலையில், சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் புறநானூறு திரைப்படத்தில் தற்போது சூர்யாவிற்கு பதில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.
ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் தெரிவிக்காத நிலையில் தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.