News
படத்துக்கு ஒதுக்குன காசுல முக்கால்வாசி எஸ்.கேவுக்கே போயிட்டே!.. படம் நல்லா வருமா?.. முருகதாஸ் படத்தில் பிரச்சனை..
Sivakarthikeyan : அயலான் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது என கூறப்படுகிறது. படத்திற்கான மற்ற வேலைகள்தான் தற்சமயம் போய்க்கொண்டிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராக இருக்கிறது.
கிட்டத்தட்ட துப்பாக்கி மாதிரியான ஒரு சீரியஸான திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் சம்பளத்திற்கே எக்கசக்கமான தொகை செலவாகிவிட்டதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த படத்திற்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை 70 கோடி எனக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கும் பொழுது 70 கோடி என்பது பெரிய தொகையாகும். ஆனால் அதில் 30 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக போய்விட்டதாம்.
மேலும் ஏ.ஆர் முருகதாஸுக்கு 20 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கின்றனர். இதிலேயே 50 கோடி போய்விட்டது. இது இல்லாமல் அனிருத்திற்கு 7 கோடி ரூபாய் இசையமைப்பதற்கு சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
57 கோடி ரூபாய் போக மீதி இருக்கும் 13 கோடி ரூபாயில் மற்றவர்களுக்கு சம்பளத்தை கொடுத்து படத்தையும் எடுத்து முடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆக மொத்தம் படத்தின் தயாரிப்பு செலவு என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது அதைவிட சிவகார்த்திகேயனின் சம்பளம் அதிகமாக இருக்கிறது இது சரியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் சினிமா பத்திரிக்கையாளர்கள்.
