Actor MGR : எம்.ஜி.ஆர் படத்தில் வாய்ப்பை இழந்த சிவக்குமார்!.. சிவாஜிதான் காரணமாம்!..

Actor MGR and Sivakumar : எம்.ஜி.ஆர் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டிருந்த அதே காலக்கட்டத்தில் சினிமாவில் பெரும் நடிகராக இருந்து வந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் திரையில் கடுமையான போட்டிகள் இருந்தன.

இருவரது திரைப்படங்களுமே எப்போதும் வெற்றியை கண்டன. பிறகு முதலமைச்சர் ஆன பிறகு இந்த போட்டியெல்லாம் விட்டுவிட்டு சிவாஜிக்கு மிகுந்த உறுதுணையாக எம்.ஜி.ஆர் இருந்துள்ளார். ஆனால் சினிமாவில் இருவரும் போட்டி போட்டு கொண்டிருந்த சமயத்தில் புது நடிகர்கள் இருவரில் எவர் படத்தில் நடிப்பது என்பதில் குழப்பத்தில் இருந்தனர்.

MGR-4
MGR-4
Social Media Bar

இந்த நிலையில்தான் நடிகர் சிவக்குமாருக்கு சிவாஜி நடிக்கும் உயர்ந்த உள்ளம் என்னும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு சென்றுக்கொண்டிருக்கும்போதே எம்.ஜி.ஆர் நடிக்கும் ஒரு படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்போது பல நடிகர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்தனர், எனவே அது சிவக்குமாருக்கு பெரிய கடினமில்லை என்றாலும் உயர்ந்த உள்ளம் படத்தின் இயக்குனர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சிவாஜி கணேசன் எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் கொடுப்பார். அந்த சமயத்தில் நாம் படப்பிடிப்பை நடத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

அப்போது நீ எம்.ஜி.ஆர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தால் நான் எப்படி உன்னை வைத்து படப்பிடிப்பை நடத்த முடியும் என கூறியுள்ளார் இயக்குனர். இதனையடுத்து எம்.ஜி.ஆர் படத்தில் சிவக்குமார் இறுதிவரை நடிக்கவே இல்லை.