News
கசமுசா காட்சிகள் அதிகம் இருந்ததால அந்த படத்தை விக்கவே இல்ல.. வெளிப்படையாக கூறிய எஸ்.ஜே சூர்யா!.
சினிமாவில் இருக்கும் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பலரும் நடிகர்களாக தங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு வாய்ப்புகளை நோக்கி காத்துக்கொண்டிருந்த ஒரு மனிதர் என்றால் அது எஸ்.ஜே சூர்யா.
இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை ரசிகர்களின் மத்தியில் கொண்டு சேர்த்தவர் எஸ்.ஜே சூர்யா.
இந்நிலையில் முழுவதுமாக நடிகராக களம் இறங்கியிருக்கும் எஸ்.ஜே சூர்யா, தற்போது முன்னணி நடிகர்களை எல்லாம் விட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்த நியூ படத்தை பற்றி கூறியிருக்கும் ஒரு சுவாரசிய தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் எஸ். ஜே. சூர்யா
திரைக்கதை ஆசிரியர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே. சூர்யா. தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய்யை வைத்து இயக்கிய வாலி மற்றும் குஷி திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.

மேலும் இந்த இரு திரைப்படங்கள் மூலம் எஸ்.ஜே சூர்யா நட்சத்திர இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனராக அறியப்பட்ட எஸ்.ஜே சூர்யா அன்பே ஆருயிரே, இசை ஆகிய திரைப்படங்களில் மூலம் அறிமுக நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் படு பிஸியாக நடித்து வரும் எஸ்.ஜே சூர்யா தமிழ், தெலுங்கு என அனைத்து திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வந்து கொண்டிருக்கிறார். இவரின் தனித்துவமான நடிப்பிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
நியூ படத்தை பற்றி பகிர்ந்த எஸ்.ஜே சூர்யா
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டஎஸ்.ஜே சூர்யாவிடம், தொகுப்பாளர் நியூ படத்தை தற்போது பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த படம் எந்த ஒரு பிளாட்பார்மிலும் கிடைக்கவில்லை ஏன் என கேட்டார்.

அதற்கு எஸ்.ஜே சூர்யா சிரித்துக்கொண்டே நான் இப்பொழுது தான் நல்ல பையன் என்ற பெயரை வாங்கி இருக்கிறேன். அந்தப் படத்தை நான் வெளியிட்டால் இந்த பெயர் போய்விடும் என கூறினார். ஏனென்றால் அந்த படத்தில் சில கசமுசா காட்சிகள் இருக்கிறது. வேண்டுமானால் அந்த படத்தின் ஒருசில காட்சிகளை நீக்கிவிட்டு புதியதாக ரிலீஸ் செய்யலாம் என கூறி சிரித்தார்.
