ஓவர் க்யூட்னெஸா இருக்கு! – சினேகா மகளின் க்யூட் பிக்ஸ்!

தமிழ் சினிமாவில் பல காலங்களாக கதாநாயகியாக இருந்து வந்தவர் நடிகை சினேகா. புன்னகைக்கு அரசி என்கிற சிறப்பு பட்டத்தை பெற்றவர். சினிமாவிற்கு வந்த காலம் முதல் அதிக கவர்ச்சியாய் நடிக்காமலே ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்.

80ஸில் பிறந்தவர்களில் பலபேர் ஸ்னேகாவின் விசிறியாய் இருப்பதை பார்க்க முடியும். பல படங்கள் நடித்த பிறகு சினேகா நடிகர் பிரச்சன்னாவை திருமணம் செய்துக்கொண்டார்.

பெரும்பான்மையான கதாநாயகிகளை போலவே நடிகை சினேகாவும் கூட தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனாலும் சின்ன சின்ன வேடங்களில் சில படங்களில் நடித்து வந்தார்.

தற்சமயம் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று சினேகாவின் குழந்தைக்கு பிறந்த நாள். அதை சினேகா கொண்டாடி வருகிறார்.

அவரது குழந்தையின் அழகிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Refresh