கண்ணதாசனுடன் சண்டையில் இருந்த சிவாஜி! – ஆனால் சிவாஜியையே சமாதானப்படுத்திய கண்ணதாசனின் பாடல்!

சினிமாவில் ஆரம்பக்காலத்தில் கவிஞர் கண்ணதாசன் சிவாஜியை பற்றி அவதூறாக பத்திரிக்கையில் எழுதியதால் இருவருக்கும் இடையே சண்டை இருந்தது. இதனால் அப்போது சிவாஜி கணேசனின் படங்களுக்கு எல்லாம் கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத மாட்டார்.

அந்த சமயத்தில் இயக்குனர் பீம்சிங், சிவாஜி கணேசன் நடித்த பாகப்பிரிவினை திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகளை எழுதினார். பாகப்பிரிவினை படத்தில் ஒரு தாலாட்டு பாடல் வரும்.

அந்த பாடலை மட்டும் பட்டுக்கோட்டை எழுதவில்லை. அதற்கு சிறிது நாள் எடுக்கும். உடனே வேண்டும் என்றால் கண்ணதாசனிடம் கேளுங்கள் என கூற பீம்சிங்கும் கண்ணதாசனை அணுகியுள்ளார். ஆனால் கண்ணதாசன் மறுத்துவிட்டார். ஏற்கனவே சிவாஜிக்கு தன்னுடன் இருக்கும் வெறுப்பினால் தான் எழுதும் பாடல் வரிகளை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என நினைத்தார் கண்ணதாசன்.

அதன்பிறகு சிவாஜியின் ஒப்புதலோடுதான் உங்களை பார்க்க வந்திருக்கிறேன் என பீம்சிங் கூறியப்பிறகு அந்த படத்திற்கு மூன்று பாடல்களுக்கு வரி எழுதி தந்தார் கண்ணதாசன். அதில் தங்கத்திலே ஒரு குறை இருந்தால் என்ற பாடலும், ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடலும் பெரும் ஹிட் கொடுத்தன.

இதையடுத்து எனது அனைத்து படங்களுக்கும் கண்ணதாசனே பாடல் வரிகள் எழுதட்டும் என கூறியுள்ளார் சிவாஜி கணேசன்.

Refresh