வந்தேண்டா பால்காரன் பாடல் உருவான கதை – வைரமுத்து செய்த சூட்சமம்!

முன்னர் தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்கள் எழுதும் பாடலுக்கு என்று தனி மரியாதை இருந்தது. இப்போது போல இல்லாமல் அப்போதெல்லாம் பாடல் வரிகள் என்றாலே அதை கவிஞர்கள்தான் எழுதும் முறை இருந்தது.

இந்த நிலையில் அண்ணாமலை திரைப்படம் தயாராகி வந்தது. அண்ணாமலை படத்திற்கு தேவா இசையமைத்தார். தேவா ரஜினி கூட்டணியில் வரும் முதல் படமாக அண்ணாமலை இருந்தது.

அப்போது கவிதாலயா ப்ரொடக்‌ஷன் நிறுவனத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததால் அவர்கள் தயாரிக்கும் எந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க அனுமதிப்பதில்லை.

அண்ணாமலை படத்தின் முதல் பாடல் மாட்டிற்கு முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும். படத்தின் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா அப்போது பசு தொடர்பான ஒரு கவிதையை படித்திருந்தார். மாடு மக்களுக்கு எப்படியெல்லாம் உபயோகப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் இந்த கவிதை அமைந்திருந்தது. எனவே அதை எடுத்துக்கொண்டு அவர் அப்படியே வைரமுத்துவை காண சென்றார்.

அந்த கவிதையை பார்த்த வைரமுத்து அதை வைத்து பாடலை எழுதினார். ஆனால் பாடலில் மாடு மனிதனுக்கு செய்யும் நன்மைகளை மட்டும் கூறாமல் மனிதன் மாடுகளுக்கு செய்யும் தீங்குகளையும் பேசியிருந்தார். அதே போல ரஜினிக்கு இதுதான் இண்ட்ரோ பாடல் என்பதால் என்னை வாழ வைத்தது தமிழ் பாலு போன்ற வரிகளை சேர்த்து பாடலை ரஜினிக்கு ஏற்றாற் போல மாற்றி அமைத்தார்.

பிறகு அண்ணாமலை வெளியான போது அதில் அனைத்து பாடலும் ஹிட் அடித்தன. ஆனால் அதில் அனைவராலும் அதிகமாக பாடப்பட்ட பாடலாக வந்தேண்டா பால்காரன் இருந்தது.

Refresh