சோபிதா நாக சைதன்யா திருமணத்தில் வந்த பிரச்சனை.. சமந்தாவும் இதே பிரச்சனையால்தான் பிரிஞ்சாங்க

சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து ஜோடி நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா உள்ளார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து அவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சமந்தாவை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நாக சைதன்யா பிறகு சோபிதா துலிபாலா உடன் காதலில் இருந்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சமந்தா நாக சைதன்யாவின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் தற்போது ஒரு முக்கியமான காரணத்தினால் தான் இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். அந்தக் காரணம் தான் தற்போது சோபிதா துலிபாலாவுக்கும் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்திருக்கிறது.

நாக சைதன்யா மற்றும் சமந்தா

நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்கள். மேலும் இவர்கள் நடித்த முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு அதன் பிறகு சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

8 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், இருவீட்டாரின் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள்.

samantha naga chaitanya2
Social Media Bar

இருவரும் பிரிந்த நிலையில் சமந்தா அவரின் படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில் மையோ சிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்ட தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு தற்போது பல படங்களிலும் நடித்து வரும் சமந்தா பல நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் நாக சைதன்யா சோபிதா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த புகைப்படங்களில் நாகார்ஜுனா வெளியிட அது சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

சோபிதா துலிபாலாவுக்கு ஏற்பட்டுள்ள அதே பிரச்சனை

நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிவிற்கு பலரும் பல காரணங்கள் தெரிவித்து வந்தாலும் அதில் முக்கியமான காரணமாக கூறப்படுவது என்னவென்றால் நாகர்ஜுனா நடிகை அமலாவை திருமணம் செய்த பிறகு, அவரை திரைப்படங்களில் நடிக்க கூடாது என கூறிவிட்டார்.

அதன் பிறகு அவரது மனைவியும் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணம் நடந்த பிறகு சமந்தாவை படங்களில் நடிக்க கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

naga chaithanya

ஆனால் சமந்தா அதை எல்லாம் கேட்காமல் தொடர்ந்து படங்களில் நடித்து வந்திருக்கிறார். இதனால் தான் இருவருக்கும் விவாகரத்து நடந்ததாக பலரும் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது சோபிதா துதிபாலாவிற்கும் அதே பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் சோபிதா திருமணத்திற்கு பிறகு இனி நடிக்க மாட்டார் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் மாபெரும் வெற்றி அடைந்த டான் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும் அந்த படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக படக்குழு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாறு அவர் திரைப்படங்களில் நடித்தால் இருவருக்கும் திருமணம் நடக்குமா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.