News
விஜய் அஜித் மாதிரி நடிகர்களால் நாசமா போயிட்டோம்!.. குமுறும் தயாரிப்பாளர்!..
தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் தயாரிப்பாளராக இருந்த நபர்களில் தயாரிப்பாளர் சௌந்தரராஜனும் முக்கியமானவர். பெரும்பாலும் அப்போதெல்லாம் ஒரு நபர் மிக எளிதாகவே இயக்குனர் ஆகிவிட முடியும். ஏனெனில் அப்போது நடிகர்களுக்கான சம்பளமெல்லாம் குறைவாகவே இருந்தது.
சில லட்சங்களிலேயே அப்போதெல்லாம் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அந்த வகையில் சௌந்தரராஜனும் அப்போது படங்களை இயக்கி லாபம் பார்த்து வந்தார். இந்த நிலையில் அப்போது நடிகர் கார்த்திக்கை வைத்து ஒரு பேன் இந்தியா படத்திற்கு திட்டமிட்டார் சௌந்தரராஜன்.
ஆனால் அந்த படம் பெரும் தோல்வியை கண்டது. அதோடு திரைப்படம் தயாரிப்பதையே விட்டுவிட்டார் சௌந்தரராஜன். இந்த நிலையில் தற்சமயம் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது ஏன் இப்போது திரும்ப நீங்கள் படம் தயாரிக்க கூடாது என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சௌந்தரராஜன் கூறும்போது இப்பலாம் ஹீரோவை தொடுற தூரத்தில் நாங்க இல்லை சார். முன்பெல்லாம் புது தயாரிப்பாளர்களாக இருந்தாலும் கூட எங்களுக்கு ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பெரும் நடிகர்களை வைத்து படம் தயாரிக்க வாய்ப்பு இருந்தது.
அவர்களிடம் கஷ்டத்தில் இருக்கோம். ஒரு படம் பண்ணி கொடுங்க என கேட்டால் எங்கள் படத்தில் நடித்து கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்போது உள்ள நடிகர்கள் எல்லாம் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களை வைத்து எங்களால் படமே தயாரிக்க முடியாது சார்.
உண்மையில் சினிமா வளர்ச்சியால் அழிந்து வருவது என்னை போன்ற தயாரிப்பாளர்கள்தான் என்கிறார் சௌந்தரராஜன்.
