Bigg Boss Tamil
சும்மாவே இருந்தா இதான் நிலை… சௌந்தர்யாவை அழ வைத்த பிக்பாஸ் அணி.. கடுப்பான ரசிகர்கள்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் மனதை கவர்ந்தவராக தற்சமயம் சௌந்தர்யா நஞ்சுண்டன் இருந்து வருகிறார். வந்த முதல் நாள் முதலேயே சௌந்தர்யா மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. எப்படி ஓவியாவிற்கு ஆர்மி உருவானதோ அதே போல தற்சமயம் சௌந்தர்யாவுக்கும் ஒரு ஆர்மி உருவாகியுள்ளது என்றே கூறலாம்.
மேலும் சௌந்தர்யா பிக்பாஸில் யாரும் மனம் நோகாமல் விளையாடி வருகிறார். ஆனால் அதே சமயம் கடந்த இரு வாரங்களாக பெரிதாக மக்களை கவரும் வகையில் சௌந்தர்யா எதுவுமே செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஆனால் அப்படி இருந்துமே கூட இரண்டு வாரங்களாக அதிக வாக்குகள் வாங்கி நாமினேஷனில் சௌந்தர்யா தப்பித்துள்ளார். இந்த நிலையில் இந்த வாரம் ஆண் போட்டியாளர்களோடு சேர்ந்து விளையாடும் பெண் போட்டியாளராக சௌந்தர்யா செல்ல ஆசைப்பட்டார்.
சௌந்தர்யாவை அழ வைத்த குழு:
அதன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியும் என அவர் நினைத்தார். ஆனால் ஜாக்குலின் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆண்கள் டீமுக்கு போய்தான் நீ ஸ்கோர் செய்ய முடியுமா? இங்கு விளையாடி செய்ய முடியாதா? என கேட்டுள்ளார்.
இதற்கு நடுவே அன்சிதாவும் சௌந்தர்யாவுக்கு எதிராக பேசியுள்ளார். இதனால் சௌந்தர்யா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். உண்மையில் பெண்கள் அணியினர் மொத்தமாக சௌந்தர்யாவுக்கு எதிராக மாறியுள்ளனர். ஏனெனில் எந்த விதத்திலும் ஸ்கோர் செய்யாமலே சௌந்தர்யா பெரும் ரசிக பட்டாளத்தை கொண்டுள்ளார். இது பெண்கள் அணியினருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.
