அந்த மாதிரி வேலைக்கு போகாதன்னு சொன்னேன்ல.. காதலனால் அவதிக்குள்ளான சௌந்தர்யா நஞ்சுண்டன்.. யாருமே அறியாத பக்கங்கள்..!
தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவராக நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் இருந்து வருகிறார். இதற்கு முன்பாக வேற மாதிரி ஆபீஸ் என்கிற ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார்.
அந்த தொடரின் வெற்றிக்கு பிறகு இவர் அதிக பிரபலமடைந்தார். அதன் மூலமாகதான் இவர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தற்சமயம் பிக் பாஸில் கலந்து கொண்ட சௌந்தர்யா நஞ்சுண்டன் தனது பழைய காதல் குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பள்ளி பருவத்தில் இருந்தே ஒருவன் என்னை காதலித்து வந்தான். நானும் அவனை காதலித்தேன்.

உண்மையை கூறிய சௌந்தர்யா:
கல்லூரி வரை எங்களது காதல் சென்றது. ஆனால் அவன் எப்பொழுதும் உடனே கோபப்பட்டு விடுவான். நான் ஏதாவது தவறு செய்ததாக நினைத்தால் உடனே என்னை அடித்து விடுவான். இப்படி அவனிடம் நிறைய முறை அடி வாங்கி இருக்கிறேன்.
ஒருமுறை கண்ணாடி பாட்டிலை கொண்டு கூட என்னை அடித்தான். ஆனால் நெடுநாள் காதல் என்பதால் எனக்கு அவனை விடுவதற்கு மனமில்லாமல் இருந்தது. அவனுக்கு நான் நடிக்க செல்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஒரு முறை போட்டோ ஷூட் சென்று அங்கு நான் எடுத்து வைத்திருந்த போட்டோக்களை பார்த்து அவன் என்னை அங்கேயே அடித்து விட்டான்.
அதன் பிறகு நான் அவனை விட்டு பிரிந்து விட்டேன் என்று கூறி இருக்கிறார் சௌந்தர்யா நஞ்சுண்டன். இவரை மாதிரி ஒரு பெண் கிடைப்பது கடினம் என்று ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில் இவரையும் ஒருவன் அடித்திருக்கிறானே என்று ரசிகர்கள் இது குறித்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.