ஒரு ரயிலே ”விக்ரம்” போஸ்டர் ஆயிட்டு.. புது ரூட்டில் கமல் விளம்பரம்!

கமல்ஹாசன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள விக்ரம் படத்திற்கு செய்யப்பட்டுள்ள விளம்பரம் வைரலாகியுள்ளது.

Vikram
Vikram Poster
Social Media Bar

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலானது. படத்தை ஜூன் 6ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ள நிலையில் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர்.

Vikram
Vikram Poster

அதற்கு படக்குழுவினர் ப்ரோமஷன் பணிகளில் தீயாய் இறங்கியுள்ளனர். தற்போது ஈரோடு ரயில் (30449)ன் என்ஜின் முழுவதுமாக விக்ரம் பட ஃபர்ஸ் லுக் போஸ்டராக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.