Cinema History
சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்த இளையராஜாவுக்கு சோறு போட்ட எஸ்.பி.பி..! இது யாருக்கும் தெரியாத சம்பவமா இருக்கே!..
இளையராஜா சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த ஆரம்பக்காலக்கட்டத்தில் அவர் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் சென்னைக்கு தன்னுடை ஆர்மோனிய பெட்டியை மட்டும் எடுத்துகொண்டு வந்துவிட்டார் இளையராஜா.
அப்போது பாரதிராஜாவும் திரைத்துறையில் நடிகர் ஆவதற்கு வாய்ப்பு தேடி வந்ததால் அவருக்கு இளையராஜாவுடன் பழக்கம் உண்டானது. பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன் எல்லோரும் ஒரே அறையில் தங்கிதான் வாய்ப்பு தேடி வந்தனர்.

அப்போது சாப்பாட்டுக்காக வேறு ஏதாவது தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் அவர்கள் இருந்தனர். அப்போதைய சமயத்தில்தான் எஸ்.பி.பி ஒரு பாடகராக வளர்ந்து வந்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் எஸ்.பி.பி தனியாக நாடகமும் நடத்தி கொண்டிருந்தார்.
அந்த நாடகத்திற்கு இசையமைக்க வாய்ப்புகளை வாங்குவதன் மூலம் உணவு பிரச்சனையை சமாளித்துவிடலாம் என எஸ்.பி.பியிடம் சென்றார் இளையராஜா. தன்னுடைய ஆர்மோனியத்தில் பிரபலமான இசைகளை எல்லாம் இளையராஜா வாசித்து காட்டினார்.
அது எஸ்.பி.பிக்கு பிடித்திருந்தது. ஆனால் அவரது நாடக குழுவில் ஏற்கனவே அனிரூத்ராவ் என்ற ஆர்மோனியம் வாசிப்பவர் இருந்தார். இருந்தாலும் இளையராஜாவின் கஷ்டத்தை புரிந்துக்கொண்ட எஸ்.பி.பி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான் இளையராஜா இந்த உயரத்தை தொட்டுள்ளார்.
