காதலித்து அதை பண்ணி கழட்டி விட்ட நவரச நடிகர்.. வாழ்க்கையை முடித்து கொள்ள நடிகை எடுத்த முடிவு.!

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலுமே அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது தலைவிரித்தாடிதான் வந்துள்ளன. அப்படியான காலங்களில் எல்லாம் அதிலிருந்து தப்பித்து கொள்ள பல நடிகைகள் போராடி வந்துள்ளனர்.

அப்படியாக நடிகை ஸ்ரீ ப்ரியாவும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். நடிகை ஸ்ரீ ப்ரியாவை பொறுத்தவரை அவர் மீது நடிகர்கள் பலர் ஆசைப்பட்டனர் என்றாலும் கூட நடிகை ஸ்ரீ ப்ரியாவிடம் பேசவே அவர்கள் எல்லாம் பயந்தனர்.

அந்த அளவிற்கு பார்ப்பவரை கண்ணாலேயே எரித்துவிடும் ஒரு நடிகையாக இருந்து வந்தார் ஸ்ரீ ப்ரியா. ஆரம்பத்தில் ஸ்ரீ ப்ரியாவின் சகோதரிதான் தமிழ் சினிமாவில் நடிப்பதாக இருந்தது. ஸ்ரீ ப்ரியாவின் சகோதரி மீனாட்சிதான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முயற்சி செய்து வந்தார்.

இந்த நிலையில் ஒரு படத்திற்காக போட்டோஷூட் எடுக்கும்போது எதற்கும் இருக்கட்டும் என ஸ்ரீ ப்ரியாவையும் போட்டோ எடுத்து வைத்தனர். படத்தின் இயக்குனருக்கு மீனாட்சியை விட ஸ்ரீ ப்ரியாவை பிடித்தது.

Social Media Bar

அதனை தொடர்ந்து ஸ்ரீ ப்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. ரஜினி, கமல் என்று பெரிய நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தப்போது கூட ஸ்ரீ ப்ரியாவுக்கு அவர்கள் மீது எல்லாம் காதல் ஏற்படவில்லை.

ஆனால் நினைவுகள் என்கிற திரைப்படத்தில் நடித்தப்போது அவருக்கும் கார்த்திக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கார்த்திக் ஸ்ரீ ப்ரியாவை விட 3 வயது இளையவர். இருந்துமே கூட இருவரும் ஆழமாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவு செய்து வைத்திருந்தனர்.

ஆனால் கார்த்தி திடீரென்று நடிகை ராகினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இதனை அறிந்த ஸ்ரீ ப்ரியா ஸ்டுடியோவிற்கு வந்து கார்த்திக்கை அடித்து துவைத்தார். பிறகு உயிரை போக்கி கொள்ளவும் முயற்சி செய்தார்.

அதிலிருந்து மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்கு பிறகு அவர் இந்த காதல் விஷயத்தில் இருந்து வெளிவந்தார். இந்த தகவலை பிரபல பத்திக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.