Connect with us

இந்த கதையை எல்லாம் படமாக்குனா யாரும் பார்க்க மாட்டாங்க!.. தயாரிப்பாளர் நிராகரித்து மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர் ஸ்ரீதர்..

sridhar

Cinema History

இந்த கதையை எல்லாம் படமாக்குனா யாரும் பார்க்க மாட்டாங்க!.. தயாரிப்பாளர் நிராகரித்து மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர் ஸ்ரீதர்..

Social Media Bar

Sridhar and Gemini Kanesan :  தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்திலேயே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்று வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் ஸ்ரீதர். ஸ்ரீதர் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராகவே அறிமுகமாகிவிடவில்லை.

முதலில் அவர் திரைக்கதை வசனம் எழுதுபவராகதான் அறிமுகம் ஆகி இருந்தார். அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் கதை எழுதுவதற்கு என்று தனி ஆட்கள் இருந்தனர். அவர்கள் நல்ல கதையை எழுதும் பட்சத்தில் இயக்குனர்கள் அந்த கதையை வாங்கி படமாக்குவார்கள்.

அதற்கு ஒரு சம்பளமும் இந்த கதை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மேலும் திரைப்படத்திலும் கதை என்று அவர்களது பெயர்கள் குறிப்பிடப்படும். ஸ்ரீதர் சினிமாவிற்கு வந்த போது திரைக்கதை எழுதி கொடுக்கும் வேலையைதான் செய்து வந்தார்.

அவரது கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இயக்குனர்களும் விரும்பி அவரது கதைகளை வாங்கினர். இந்த நிலையில் தான் ஒரு முக்கோண காதல் கதையை ஸ்ரீதர் எழுதினார். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ஏற்கனவே நிறைய முக்கோண காதல் கதை கொண்ட திரைப்படங்கள் வந்த காரணத்தினால் அந்த கதைக்கு அவ்வளவாக மதிப்பு ஏற்படவில்லை.

தயாரிப்பாளர்களே அந்த கதை ஓடாது என்று முடிவெடுத்தனர். ஆனால் அந்த கதை நல்ல வெற்றியை கொடுக்கும் என்று நம்பினார் ஸ்ரீதர். எனவே அவர் இரண்டு தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை கூறினார் ஆனால் அவர்கள் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

அப்படி ஏற்றுக் கொள்ளாமல் போன நிறுவனங்களில் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒன்று. ஆனால் சில நாட்களாக அவர்களிடம் எந்த திரைப்படமும் எடுக்கப்படாமல் இருந்ததால் ஜெமினி ஸ்ரீதர் கூறிய அந்த கதையை படமாக்கினர். அப்போது ஸ்ரீதருக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அவர்களிடம் கூறி அந்த படத்தை அவரே இயக்கினார்.

அந்த படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை சுத்தமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு இல்லை என்றாலும் ஏதோ ஒரு இயக்குனரை அறிமுகப்படுத்தினோம் என்றாவது இருக்கட்டும் என்று ஸ்ரீதருக்கு வாய்ப்பளித்தனர் ஆனால் அந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது கல்யாண பரிசு என்ற அந்த திரைப்படம் இப்போதும் கூட பழைய சினிமா பார்த்த பலருக்கும் பிடித்த படமாக இருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top