News
குத்தாட்டம் பாட்டில் விஜய் அம்மாவை கோர்த்துவிட்ட தேவா மகன்.. அதுவும் விஜய் படத்துலயே..!
நடிகர் விஜய் பெரிய நடிகரானதற்கும் அவரது தந்தை பெரிய இயக்குனரான ஆனதற்கும் பின்னால் இருக்கும் முக்கிய ஆளாக இருப்பவர் எஸ்.ஏ சந்திரசேகரின் மனைவியும் விஜய்யின் தாயுமான ஷோபா சந்திரசேகர்.
எஸ்ஏ சந்திரன் சேகர் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான் ஷோபா சந்திரசேகரின் மிகப் பெரும் கனவாக இருந்தது. தனது மனைவியின் கனவை நினைவேற்ற வேண்டும் என்பதற்காகவே விடாப்பிடியாக இருந்து இயக்குனராக மாறினார் சந்திரசேகர்.
முக்கிய புள்ளி:
அதற்குப் பிறகு திரையுலகில் பல துறைகளில் தனது மகனுக்கும் மனைவிக்கும் வாய்ப்புகளை பெற்று கொடுத்தார் எஸ்.ஏ சந்திரசேகர். அந்த வகையில் ஷோபா சிறப்பான குரல் வளத்தை கொண்ட நபராக இருந்ததால் நிறைய பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பை அவருக்கு பெற்று கொடுத்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.

அப்படியாக நெஞ்சிருக்கும்வரை, ரசிகன் போன்ற நிறைய விஜய் படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார் ஷோபா சந்திரசேகர். அதேபோல விஜய் நடிக்காத நிறைய திரைப்படங்களிலும் இவர் பாடல் பாடியிருக்கிறார். பெரும்பாலும் ஷோபா பாடிய பாடல்கள் எல்லாம் மெலோடியான பாடல்களாக தான் இருக்கும்.
தன்னுடைய அம்மாவின் குரல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஒரு பேட்டியில் விஜய்யே கூறியிருக்கிறார். விஜய் பாடகராக மாறுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது அவரது அம்மாதான் அவரது அம்மாவின் காரணமாகவே பாடல்களின் மீது ஈடுபாடு கொண்டார் விஜய்.
பாடல்களில் ஆர்வம்:
பிறகு திரைப்படங்களில் பாடல்களில் பாட துவங்கினார். இப்போது வரை பாடியும் வருகிறார். சொல்லப்போனால் ஷோபா சந்திரசேகரை விட நடிகர் விஜய்தான் தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார் என்று கூறலாம்.
ஆனால் தேவா இசையமைத்த திரைப்படங்களில் கூட மெலோடி பாடல்களை பாடி வந்த ஷோபா சந்திரசேகரை தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவா கானா பாடல் பாட வைத்த சம்பவம் குறித்து ஸ்ரீகாந்த் தேவா ஒரு மேடையில் பேசியிருக்கிறார்.

சிவகாசி திரைப்படத்தில் வரும் கோடம்பாக்கம் ஏரியா பாடலை ஷோபா சந்திரசேகர் பாட வேண்டும் என்று நினைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. இந்த விஷயத்தை அவரிடம் சென்று கூறிய பொழுது இப்படி ஒரு பாடலை நான் பாடுவது கடினம் என்று கூறியிருக்கிறார்.
இருந்தாலும் விடாப்பிடியாக இருந்த ஸ்ரீ காந்த் தேவா அவரை வைத்தே அந்த பாடலை பாட வைத்து வெளியிட்டும் இருக்கிறார். அந்த பாடல் பயங்கரமான வெற்றியை கொடுத்தது. ஆனாலும் அதற்கு பிறகு பலருக்கும் ஷோபா சந்திரசேகர் தான் அந்த பாடலை பாடினார் என்பது தெரியாமல் இருந்தது இதனாலே மேடையில் இந்த விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
