Connect with us

இழுத்து மூடப்படுகிறதா கார்ட்டூன் நெட்வொர்க் சேனல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஹேஷ்டேக் ட்ரெண்டிங்!

Tamil Cinema News

இழுத்து மூடப்படுகிறதா கார்ட்டூன் நெட்வொர்க் சேனல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஹேஷ்டேக் ட்ரெண்டிங்!

Social Media Bar

90களில் டிவி பார்த்து வளர்ந்த தலைமுறை முதல் இன்றைய 2கே கிட்ஸ் வரை எல்லார் மனதிலும் மறக்க முடியாத கார்ட்டூன் சேனலாக இடம் பெற்றிருப்பது கார்ட்டூன் நெட்வொர்க்.

90களில் கார்ட்டூன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பான டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ, பாப்பாய் தி செய்லர் மேன் உள்ளிட்ட பல தொடர்கள் அப்போதைய கிட்ஸுக்கு விருப்பமான தொடர்கள். அதன் பின்னர் 2000களில் Ben 10, Teen Titans, Courage the cowardly dog உள்ளிட்ட பல தொடர்களும் சக்கைப்போடு போட்டது.

ஆனால் சமீப காலமாக புதிய தலைமுறையினர் ஸ்மார்ட்போன்களில் ஆர்வம் காட்டி வருவதால் கார்ட்டூன் சேனல்களுக்கான வரவேற்பு குறைந்துள்ளது. எனினும் கார்ட்டூன் நெட்வொர்க் தொடர்ந்து டீன் டைட்டன்ஸ் உள்ளிட்ட சில தொடர்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில்தான் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் இழுத்து மூடப்படுவதாக எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பல ரசிகர்களும் கார்ட்டூன் நெட்வொர்க் உடனான தனது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இதற்கு முன்பே பலமுறை இதுபோல அந்த சேனல் மூடப்படுவதாக வதந்திகள் பரவியுள்ளதால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் தற்போது குழந்தைகளிடையே அனிமே மோகம் அதிகரித்துள்ள நிலையில் மை ஹீரோ அகாடமி, ஒன் பீஸ் போன்ற பிரபல அனிமே தொடர்களையும் பல்வேறு மொழிகளில் கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top