News
என்னத்த கிழிக்கிறன்னு பாக்குறேன்!.. சிம்புவை வைத்து தப்பு கணக்கு போட்ட ஃபைட் மாஸ்டர்!..
சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. என்னதான் இயக்குனர் டி.ராஜந்திரனின் மகனாக இருந்தாலும் கூட அவ்வளவு எளிதாக எல்லாம் இந்த இடத்தை பிடித்துவிடவில்லை சிம்பு. ஆரம்பத்தில் சிம்புவின் படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை.
போக போக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு கதாநாயகனாக ஆக்கி கொண்டார் சிம்பு. படபிடிப்புக்கு தாமதமாக வருவது போன்ற குறைகள் சிம்புவிடம் இருந்தாலும் கூட அவர் நடிப்பு என வரும்போது சிறப்பான நடிப்பை கொடுக்க கூடியவர்.

இதுக்குறித்து ஃபைட் மாஸ்டர் ஸ்டண்ட் சிவா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒரு படத்தில் சில நிமிடங்களுக்கு பெரிய சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது. அப்போது நான் சிம்புவை அழைத்து ஒரு முறை ரிகர்சல் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறினேன்.
உடனே சிம்பு ரிகர்சல் எல்லாம் வேண்டாம் நேரடியாக படப்பிடிப்புக்கு போகலாம் என்றார். ஆனால் அந்த காட்சி கொஞ்சம் பெரிய சண்டை காட்சி என நான் கூறியும் சிம்பு கேட்கவில்லை. நேரடியாக படப்பிடிப்பில் அப்படி என்ன செய்யுறேன்னு பாக்குறேன் என நான் மனதிற்குள் கூறி கொண்டேன்.
ஆனால் ஒரு தவறுக்கூட இல்லாமல் ஒரு ஷாட்டில் அந்த சண்டை காட்சியை முடித்தார் சிம்பு. அதை பார்த்ததும் யார்ரா இந்த பையன்னு இருந்தது என தனது அனுபவத்தை கூறுகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சிவா.
