Movie Reviews
OTT Review: நாடகம் போடும்போது பேயாக மாறும் கிராமம்.. மந்திரவாதியாக சமந்தா.. Subham Movie Review
தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் சுபம். இந்த திரைப்படத்தை ஹர்ஷித் ரெட்டி என்பவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தை பிரவீன் கேந்திரகுலா என்பவர் இயக்கி இருக்கிறார். சமந்தா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை சமந்தாதான் தயாரித்தும் இருக்கிறார்.
படத்தின் கதைப்படி ஸ்ரீனிவாசன் என்கிற கதாநாயகன் ஒரு கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் ஆகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு சீரியலின் காரணமாக அந்த கிராமத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.
தொடர்ந்து அந்த சமயங்களில் பெண்கள் வேறு விதமாக நடந்து கொள்வதை ஆண்கள் காண்கின்றனர். இதனை அடுத்து கதாநாயகன் இது குறித்து ஆய்வு செய்யும் பொழுது அந்த கிராமத்தில் ஏற்கனவே இறந்து போன பாட்டிகள் எல்லாம் அந்த 9 மணி சீரியலை பார்ப்பதற்காக மட்டும் அந்த வீட்டில் இருக்கும் இளம் பெண்கள் உடலில் புகுவதை அறிந்து கொள்ள முடிகிறது.
இதனை தடுப்பதற்கு கதாநாயகன் என்ன செய்யப் போகிறான் என்பதாகதான் கதை போகிறது. ஆனால் இதில் மோசமான விஷயம் என்னவென்றால் போக போக அந்த பேய்களின் அட்டகாசம் என்பது அதிகரிக்க துவங்குகிறது.
இந்த நாடகம் முடிந்தால் மட்டுமே இந்த பேய்கள் அனைத்தும் இவர்களுக்கு தங்களது மனைவிகளின் உடலை விட்டு பிரியும் என்பதை அறிந்த அந்த கிராமத்து ஆண்கள் அடுத்தடுத்து என்ன செய்கிறார்கள் என்பது தான் கதையாக இருக்கிறது.
கதை முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஓ.டி.டியில் இப்பொழுது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
