Connect with us

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் ஹிட் படங்களும், ஃப்ளாப் படங்களும் ஒரு பார்வை!..

sj surya

News

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் ஹிட் படங்களும், ஃப்ளாப் படங்களும் ஒரு பார்வை!..

Social Media Bar

S. J. Suryah: சினிமாவில் சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தற்பொழுது நடிகர்களாக படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் அவர்களின் தனித்துவமான நடிப்பின் மூலம் மக்களின் மனதை விட்டு நீங்காமல் தனக்கென ஒரு தனியிடம் பிடித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் இயக்குனர், நடிகரான எஸ். ஜே. சூர்யா தன்னுடைய இயக்கத்தில் பல வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். அந்த வரிசையில் இயக்குனர் எஸ். ஜே சூர்யா இயக்கத்தில் வெற்றி படங்களையும் தோல்வி படங்களையும் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா

எஸ் ஜே சூர்யா நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், மேலும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்பொழுது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகராக இவர் பல படங்களில் நடித்து தற்பொழுது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

sj suriya

இவர் தற்பொழுது பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் வில்லன், நடிகர் என எந்த காதபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் தனகென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று தான் கூறவேண்டும்.

தற்பொழுது பயங்கர பிஸிசியாக நடித்து வரும் எஸ். ஜே. சூர்யா அவரின் இயக்கத்தில் பல படங்களை இயக்கியும், தயாரித்தும், நடித்தும் இருக்கிறார்.

எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் வெற்றி படங்கள் மற்றும் தோல்வி படங்கள்

கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த “வாலி” திரைப்படம் 30 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.

கடந்த 2000 ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த “குஷி ” திரைப்படம் 15 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி அடைந்தது.

அதே “குஷி ” திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து 25 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது

கடந்த 2004 ஆம் ஆண்டு மகேஷ் பாபுவின் நடிப்பில் “நானி ” என்ற திரைப்படம் வெளிவந்து 12 கோடி மட்டும் வசூல் செய்து தோல்வி அடைந்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டு எஸ். ஜே. சூர்யா நடிப்பில் “நியூ” திரைப்படம் வெளிவந்து 4 கோடி வசூல் செய்து வெற்றி பெற்றது.

கடந்த 2005 ஆம் ஆண்டு “அன்பே ஆருயிரே” என்னும் திரைப்படம் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்து 2.5 கோடி மட்டும் வசூல் செய்து தோல்வி அடைந்தது

கடந்த 2010 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த “கொம்மாரம் புலி” 25 கோடி வசூல் செய்து தோல்வியடைந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்த “இசை ” திரைப்படம் 15 கோடி வசூல் செய்து சுமாரான வெற்றி பெற்றது.

To Top