Tamil Cinema News
9 மாச கர்ப்பத்தில் இருக்கும்போது அதை செய்ய சொன்னாரு… மணிரத்னம் இரக்கமில்லாதவரு.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை.!
1990கள் காலக்கட்டங்களில் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து மாற்று சினிமாவை கொண்டு வந்த இயக்குனராக இயக்குனர் மணி ரத்னம் இருந்து வருகிறார். அவர் இயக்கிய தளபதி திரைப்படம் அதுவரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் இருந்து மாறுப்பட்ட சினிமாவாக இருந்தது.
அதற்கு முன்பே வந்த நாயகன் படமும் வித்தியாசமான படம்தான் என்றாலும் கூட நாயகன் திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தளபதி திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து இப்போது வரை இயக்குனர் மணிரத்னத்தின் வேலைகள் என்பது வித்தியாசமானதாகதான் உள்ளது.
பொன்னியின் செல்வன் என்னும் படத்தை தமிழ் சினிமாவில் சாத்தியமாக்கியவர் இயக்குனர் மணிரத்னம்தான். இந்த நிலையில் அவருடைய மனைவியான சுஹாசினி அவரைக்குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறும்போது ஆரம்பத்தில் நான் நடிகைகளுக்கு டப்பிங் செய்துக்கொண்டிருந்தேன். எனது குரல் நன்றாக இருக்கிறது என்று மணிரத்தினம் அவர் இயக்கிய படங்களிலும் என்னையே டப்பிங் செய்யுமாறு கூறினார்.
இப்படியாக திருடா திருடா திரைப்படத்திற்கு நான் டப்பிங் செய்தேன். அப்போது 9 மாத கர்ப்பத்தில் இருந்தேன். அப்போது ஒரு சில காட்சிகளில் சத்தமாக பேச வேண்டி இருந்தது. ஒரு 9 மாத கர்ப்பிணியை இப்படி சத்தமாக பேச சொல்லி கஷ்டப்படுத்துறீங்களே என நான் மணிரத்தினத்தை திட்டினேன்.
அன்று உண்மையில் எனக்கு கஷ்டமாக எல்லாம் இல்லை. ஆனால அவரை வம்பு செய்வதற்காக அப்படி செய்தேன் என கூறியுள்ளார்.