சாதி ஜாதகமெல்லாம் பார்த்து கல்யாணம் பண்றதுக்கு இதை பண்ணி குழந்தையை காக்கலாம்!. உபதேசம் கூறும் மணிரத்தினம் மனைவி!.

இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியான சுஹாசினி பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதும் குறைந்துவிட்டது என்றாலும் கூட அவர் நடித்த சில திரைப்படங்கள் எல்லாம் எப்போதும் மக்கள் மத்தியில் பேசப்படும் படங்களாக உள்ளன.

சுஹாசினி சமீபத்தில் விழிப்புணர்வுக்காக ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் அவர் கூறும்போது திருமணம் செய்யும்போது நான் ஜாதகம் பார்த்து எலலம் திருமணம் செய்யவில்லை. இருந்தாலும் எங்கள் சொந்தத்தில் சிலர் ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தனர்.

Social Media Bar

மக்களுக்கு நான் கூறி கொள்வதெல்லா ஜாதகம், சாதி போன்றவற்றை பார்த்து திருமணம் செய்வதற்கு பதிலாக ஒவ்வொருவரும் இரத்த பரிசோதனை செய்துக்கொண்டு உங்கள் திருமணத்தை செய்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது மாலத்தீவுகளில் இரத்த பரிசோதனை செய்து கொண்ட பிறகுதான் அந்த ஜோடிகளின் திருமணத்தை அங்கீகரிக்கின்றனர் என கூறுகிறார்.

தலசீமியா நோய் விழிப்புணர்வு:

நேற்று உலக தலசீமியா தினத்தை ஒட்டி சுஹாசினி இதை பேசியிருந்தார். தலசீமியா என்பது இரத்தத்தில் மரபணு தொடர்பாக ஏற்படும் நோய் ஆகும். ஒரே மரபணு கொண்ட இருவர் திருமணம் செய்துக்கொள்ளும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

எனவேதான் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுஹாசினி பேசியிருந்தார்.