Cinema History
இதனால்தான் விவேக்கோடு 3 வருஷம் பேசலை!.. ஓப்பனாக கூறிய சுந்தர் சி!..
தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். ஏனெனில் கலைவாணர் எப்போதும் அவரது காமெடிகளில் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை பேசக்கூடியவர். நடிகர் விவேக்கும் கூட அதே போல தனது காமெடியின் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியவர்.
இந்த நிலையில் இயக்குனர் சுந்தர் சி அனைத்து காமெடி நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியவர். ஆரம்பத்தில் அவர் விவேக்கை வைத்தும் திரைப்படங்களை இயக்கி வந்தார். ஆனால் சின்ன மனஸ்தாபம் காரணமாக அவருக்கும் சுந்தர் சிக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.

அதன் பிறகு விவேக்குடன் மூன்று வருடங்களுக்கு பேசவே இல்லை என்கிறார் சுந்தர் சி. அதன் பிறகு அவர் வீராப்பு திரைப்படத்தை இயக்கும்போது அந்த திரைப்படத்தில் முதலில் சந்தானத்தை நடிக்க வைக்க இருந்தார். ஆனால் தயாரிப்பாளர் விவேக்தான் படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எனவே சுந்தர் சி அதன் பிறகு விவேக்கிடம் பேசியுள்ளார். ஆனால் பழைய பகையை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் உடனே அந்த படத்தில் நடித்து கொடுப்பதாக கூறினார் விவேக்.
அரண்மனை 3 படப்பிடிப்பின்போது நாங்கள் எல்லாம் ஒரு காட்டு பகுதியில் உள்ள அரண்மனையில் படப்பிடிப்பை நடத்தி வந்தோம். அப்போது கூட தினசரி உடல்நிலையை பார்த்துக்கொள்வார் விவேக். ஆனால் சீக்கிரமே நம்மை எல்லாம் விட்டு சென்றுவிட்டார் என கூறுகிறார் சுந்தர் சி,
