News
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கொடுமை என்னன்னா!.. விஜய்யுடன் படம் பண்ண முடியாமல் போனது இதனால்தான்!.. கடுப்பான சுந்தர் சி!..
காமெடி திரைப்படங்கள் மூலமாக கூட மக்கள் மத்தியில் பிரபலமாக முடியும் என்பதை நிரூபித்த தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் காமெடி திரைப்படங்களாகதான் இருக்கும்.
நிறைய ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் கூட சுந்தர் சிக்கு ஒரு மைனஸ் உண்டு என கூறலாம். எந்த ஒரு நடிகரிடமும் அவருக்கு விரிவாக கதை சொல்ல வராது. சுருக்கமாக சுந்தர் சி பட கதைகளை கூறுவார். ஆனால் விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்கள் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டுதான் நடிக்க ஒப்புக்கொள்வார்கள்.

இதனாலேயே விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பை இழந்தார் சுந்தர் சி. இதுக்குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கொடுமை என்னன்னா ஒருத்தனுக்கு கதை சொல்ல தெரிஞ்சிட்டா அவனை இயக்குனரா ஏத்துக்குறதுதான்.
சினிமாவில் கதை சொல்லுறது தனி டிப்பார்ட்மெண்ட் திரைப்படம் இயக்குவது தனி டிப்பார்ட்மெண்ட் ஆனால் அதெல்லாம் புரியாமல் நல்லா கதை சொன்னாலே அவன் நல்லா படம் இயக்குவான் என நினைப்பது சரி கிடையாது என கூறியுள்ளார் சுந்தர் சி.
